தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 augustus 2011

மூவரின் உயிர் காத்தலுக்கான ஈழத்தமிழரின் கருணை மனு! - சி. சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர்

[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 12:21.27 PM GMT ]
பாரத தேசத்தின் முன்னாள் மாண்புமிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் எமது உறவுகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனும் செய்தி அறிந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அதிக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம்.
மேன்மை மிகு ஜனாதிபதி அவர்கள்,
ஜனாதிபதி செயலகம்,
புதுடெல்லி,
இந்திய ஜனநாயகக் குடியரசு.
மாண்பு மிகு முதல்வர் அவர்கள் ஊடாக,
தமிழ்நாடு.
உயிர் காத்தலுக்கான ஈழத்தமிழரின் கருணை மனு
பாரத தேசத்தின் முன்னாள் மாண்புமிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பின் பிரகாரம் எமது உறவுகளான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனும் செய்தி அறிந்து, ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் அதிக அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளோம்.
வரலாற்றினாலும் தொன்மை மிகு பண்பாட்டினாலும் இணைவு பெற்ற இரு தேசங்களாகவும் இரத்த பந்த உறவினர்களாகவும் நாங்கள் உங்களுடன் வாழ்ந்து வருகிறோம்.
இலங்கைத்தீவில் ஏற்பட்ட பகைமையும் அதனால் எழுந்த ஈழத்தமிழரின் துயர வாழ்வையும் மூன்றாந்தரத் தந்திரோபாயங்கள் ஊடகவே இலங்கை அரசு அணுகி வந்திருக்கின்றது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
இந்தப்பகை முரணும் அதன் பரிணாமங்களும் சில சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர் மீதான தவறான புரிதல்களையும் அணுகு முறைகளையும் பிற அரசுகள் கைக்கொள்ள இலங்கை அரசு ஊக்கியாக இருந்து வந்துள்ளது என்பதே வரலாறு.
ஆனால் இந்திய தேசத்தின் உண்மையான நேச சக்தியாக எப்போதும் ஈழத்தமிழர்களே இருந்து வருகிறார்கள் என்பதை வரலாற்றில் மறைக்க முடியாது.
எது எவ்வாறு இருந்த போதும் மாண்மிகு பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களின் கொலையின் போதும் அக்கொலையால் இந்திய மக்கள் கொண்டிருக்கின்ற நெடுந்துயரின் போதும் அனுதாபம் மிகுந்த பங்காளர்களாக ஈழத்தமிழர்களாகிpய நாங்கள் இருந்து வருகின்றோம்.
அன்பு, காருண்யம், மன்னித்தல், என்னும் உயர் விழுமியங்களை ஏற்றுப் போதிக்கின்ற பாரத அரசும் பாரத மக்களும் தூக்குத் தண்டனைக்காகக் காத்திருக்கின்ற எம் உறவுகளுக்கு இரக்கம் காட்டி உலக அளவில் காலாவதியாகி வரும் தண்டனை முறைகளுக்கு மாற்றீடாகச் சிந்தித்தித்து செயற்படுத்துமாறு தயவுடன் வேண்டுகிறோம்.
சிங்களப் பெருந்தேசிய அடக்குமுறைகளாலும் அவர்களின் கொடிய யுத்தத்தாலும் ஏற்பட்ட இரத்தத்ததையும் வலிகளையும் ஆற்றமுடியாது அந்தரித்து நிற்கும் சமூகம் ஒன்றின் சார்பில் எங்கள் சகோதரர்கள் மீது கருணை அளிக்கக் கோருகிறோம்.
தூக்குத் தண்டனை எனும் பாவச் செயல் ஒன்றை நிறைவேற்றி ஈழத்தமிழர்களின் இதயங்களில் மாறாப் பெருங்காயம் ஒன்றை ஏற்படுத்தி விடவேண்டாம் என்று அன்புரிமையோடு இறைஞ்சுகிறோம்.
பழிக்குப் பழி தீர்க்கா பக்குவம் மிகுந்த இந்திய மண்ணையே நாங்கள் காண விரும்புகிறோம். ஏனெனில் ஈழத்தமிழர்களின் தாய் மண் பாரத மாதாவே என்பதை வரலாறு எமக்கு நினைவூட்டி வருகிறது.
அதனால்தான் இந்திய நடுவண் அரசையும் தமிழக அரசையும் தங்களின் பாதுகாப்புக் கவசங்களாக நம்பி இலங்கை அரசின் வன்கொடுமைகளிடையேயும் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.
ஈழத்தமிழர்களின் மொத்த உணர்வையும் உணர்வின் குரலையும் கருணையோடு ஏற்று சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை விலக்களிப்புச் செய்வதன் மூலம் மாண்புமிகு பிரதமர் ரஜீவ்காந்தி அவர்களின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துவதுடன் பாரதப் பண்பாடு கீர்த்தி பெறவும் இவ்வுறவுகள் மீது கருணை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
ஈழத்தமிழர் சார்பாக,
சிவஞானம் சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர்
யாழ்.மாவட்டம்

Geen opmerkingen:

Een reactie posten