தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 augustus 2011

வெள்ளைக் கொடி சம்பவம் முற்றிலும் பொய்யானது : தமிழ்ச்செல்வன் மனைவி ரிவிர பத்திரிகைக்கு செவ்வி

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 02:55.51 AM GMT ]
இறுதிக் கட்ட போரின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் மீது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவி சசிரேகா தமிழ்ச் செல்வன் ரிவிர பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் படையினருடன் நடைபெற்ற மோதல்களின் போது உயிரிழந்தனர்.
வெள்ள முள்ளிவய்க்கால் பிரதேசத்தில் சிக்கியிருந்த சசிரேகா கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் ஏனைய சிவிலியன்களுடன் இணைந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
புலம்பெயர் தமிழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களினால் தமிழ் மக்களே பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட போரின் போது என்ன நேர்ந்தது என்பதனை அந்தப் பிரதேச வாழ் மக்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள் எனவும், வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு இது குறித்து தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
புலம்பெயர்ந்த தமிழர்கள் எங்களை தவறாக வழிநடத்த முனைவது இனியும் வேண்டாம் – தமிழ்ச்செல்வனின் மனைவி
இலங்கையில் இனங்களுக்கிடையே இனிப் பிரிவினையே தேவையில்லை. தமிழர்கள் பட்டவைகள் போதும். இதுவரை நடந்தவற்றை வைத்து நான் புலம்பெயர்ந்த தமிழ்ச் செயற்பாட்டாளர்களிற்கு சொல்லுவது யாதெனில் உங்கள் எந்த முயற்சியுமே எங்களிற்கு நன்மை தராது என த நேசன் என்ற பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இசைச்செல்வி, சசிரேகா என அறியப்பட்ட தமிழ்ச் செல்வனின் மனைவி மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களின் முயற்சிகளின் மூலமாக எங்களை அழிப்பதற்கு முயல வேண்டாம். எங்களிற்கு எந்தவொரு சண்டையும் இனித் தேவையில்லை. இனியும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத் தமிழர்களை தவறான வழியில் நடத்த முனைவது இனி எப்போதுமே வெற்றி பெறாது என்று தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்துள்ள அப் பேட்டியில் தமிழ்ச்செல்வன் இறந்த பிறகு, தாங்கள் ஏறக்குறைய விடுதலைப்புலிகளால் கைவிடப்பட்டதாகவும் தன்னையும் தனது பெற்றோரையும் இந்தியாவிற்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அதனை விடுதலைப்புலிகளின் தலைவர் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்ததோடு. போர் உச்சமடைந்த நேரம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதித்காவது அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்த போது பதிலேதும் தரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அன்ரன் பாலசிங்கமே தங்களது திருமணத்தை ஏற்பாடு செய்ததாகவும் தமிழ்ச்செல்வனின் குடும்பத்திற்கோ தனது குடும்பத்திற்கோ திருமணம் நடந்த விடயம் தெரியாது எனவும் தெரிவித்துள்ள அவர் தளபதி சூசையின் மனைவியுடனே தான் நெருங்கிப் பழகியதாகவும் மற்றைய தளபதிகளின் மனைவிகளுடன் அவ்வளவு பழக்கமில்லையெனவும், விடுதலைப்புலிகளின் தலைவரின் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் இந்த போரில் தாங்கள் தோற்கப் போகிறோம் என்பதை மக்களிற்கு எந்தவிதமாகவும் தெரியப்படுத்தவில்லை எனவும் மே 2009 ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் முற்றாக அழியப் போகிறார்கள் என்பதை தான் தெளிவாக உணர்ந்திருந்தேன் எனவும் தெரிவித்த சசிரேகா தனது கணவனின் இராணுவப் படிநிலையில் (பிரிகேடியர்?) இருந்த பலர், பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரணி உள்ளிட, அக்கால கட்டத்தில் கொல்லப்பட்டிருந்தார்கள் என்றும் இதனாலேயே தான் இவர்கள் தோற்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளால் கைவிடப்பட்ட தானும் தனது குழந்தைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னந்தனியே ஓரிடத்தில் நின்று அழுதுகொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு இளைஞர் நீங்கள் தமிழ்ச்செல்வனின் மனைவியல்லவா என்று கேட்டு தன்னையும் தனது பிள்ளைகளையும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசதிற்குள் கொண்டுவருவதற்கு உதவி செய்தததாகவும் இராணுவம் தங்களை நன்றாகக் கவனித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் தாங்கள் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடைந்ததாகக் கூறப்படுவதில் எந்த உண்மையுமில்லை என்று தெரிவித்துள்ள அவர், புலிகளின் தளபதிகள் அவ்வாறு வந்திருப்பார்கள் என்பதையும் தான் நம்பவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten