தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 9 augustus 2011

பிரிட்டனின் மூன்றாவது இரவாக பல நகரங்களில் வன்முறை: வீதியில் நடமாடுவோரை நிர்வாணமாக்கும் கொள்ளையர்

[ செவ்வாய்க்கிழமை, 09 ஓகஸ்ட் 2011, 11:59.36 AM GMT ]
மூன்றாவது இரவாக லண்டனின் பல இடங்களில் கலவரங்களும் வன்முறையும் சூறையாடல்களும் நடந்துள்ளன. பர்மிங்ஹாம், லிவர்பூல், மான்செஸ்டர், நாட்டிங்ஹம், பிரிஸ்டல் ஆகிய ஊர்களிலும் வீதிக் கலவரங்கள் வெடித்துள்ளன.
விடுமுறையில் இருந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் அதனை பாதியிலேயே முடித்துக்கொண்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.
கலவரங்களைத் தடுக்கும் நோக்கில் இதுவரையில் லண்டனில் மட்டுமே 350க்கும் மேற்பட்டவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 60க்கும் அதிகமானோர் மீது முறையான குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து யார்ட் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
லண்டனின் வடமேற்கிலுள்ள பிரெண்ட் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டுக்கொண்டிருந்த பொலிஸ்காரர் ஒருவர் மீது காரை விட்டு மோதிய இளைஞர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பர்மிங்ஹாமிலும் இளைஞர் கும்பல்கள் கடைத்தெருவில் அட்டூழியம் செய்திருந்தனர். கடைகளின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து சென்று கையில் கிடைத்ததை வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடுவதில் அவர்கள் ஈடுபட்டனர். அங்கே 100 இளைஞர்கள் வரை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நகரின் ஹாண்ட்ஸ்வொர்த் பகுதி காவல் நிலையம் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் நகரில் இளைஞர்கள் கார்களை அடித்து உடைப்பதில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லிவர்பூல் நகரத்திலும் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு திரியும் சுமார் 200 பேர் கொண்ட இளைஞர் கும்பல் சொத்துக்களை சேதமாக்கியதாக பொலிசார் கூறினர்.
நாட்டிங்ஹம்ஷைர் மாவட்டத்தில் செயிண்ட் அன் பகுதியிலும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறைகள் தீவிரமடைந்திருந்த நிலையில், சில இடங்களில்  பட்டப்பகலில் வீதியில் செல்லும் மனிதர்களை கொள்ளையர்கள்  நிர்வாணமாக்கி ஆடைகள் உட்பட சகல உடைமைகளையும் பறித்துக்கொண்டோடும் சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
லண்டன், பேர்மிங்ஹாம் நகரங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாகவும் பொலிஸார் அவற்றை முறியடிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் தனது ஆடைகளை கழற்றிக்கொடுக்கும் வீடியோ புகைப்படமும் பெண்ணொருவர் ஆடைகளை பறிகொடுத்த நிலையில் முழு நிர்வாணமாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் முன்னால் நிற்கும் புகைப்படமும் ட்விட்டர் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
டெட்போர்ட், தெற்கு லண்டன் பகுதிகளில் பலர் நிர்வாணப்படுத்தப்பட்டதாக ட்விட்டர் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகவல்கள் ஆதாரமற்றவையாக இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இத்தகவல்களை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவரும் தெரிவித்துள்ளார். கடந்த வியாழனன்று  லண்டனில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கடந்த சில தினங்களாக பாரிய வன்முறைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten