[ வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 09:40.07 PM GMT ]
வன்னியில் நிலத்திற்குத் தவிக்கும் சனங்களின் துயரம் இன்னுமின்னும் பெருகிய இன்றைய காலத்தில் நிலப்பிரச்சினை பல்வேறு வடிவெடுத்து சனங்களை தவித்து அலைய வைக்கும் போக்காகத் தொடருகிறது.
போர் முடிந்து இரண்டாண்டுகளைக் கடக்கிற இன்றைய நாட்களில் நிலத்திற்குத் தவிக்கும் இன்னொரு குடியிருப்பு மக்களைப் பற்றி எழுத நேர்ந்து விட்டது. இந்தக் குடியிருப்பு மக்களின் தவிப்பை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பல வழிகளில் வெளிப்படுத்தி வந்தும் அந்த மக்களின் அவலம் முடிவற்றுத் தொடர்கிறது என்பதுதான் கிளிநொச்சியில் இன்று அதிர்கிற இன்னொரு கதை. வாழ் நிலத்திற்குத் தவிக்கும் மக்களின் துயரை மிகச் சாதாரணமானதாக ‘எங்காவது போங்கள்!’ ‘என்னாவது செய்யுங்கள்!!’ என்ற வகையில் மதிக்கப்பட்டு அதிகாரங்களால் சனங்கள் உதரப்படும் இன்றைய காலத்தில் இராமநாதன் குடியிருப்புச் சனங்களின் கதையும் வன்னியின் நில அரசியலில் எல்லாவற்றையும் அதிர வைக்கிறது.
அவலத்தின் மத்தியில் உயரமான தென்னை மரங்கள் நம்பிக்கையுடன் அசைந்து கொண்டிருக்கின்றன. ஒரு மழைக்காலத்தின் முன்பாகவும் மழைக்காலத்திலும் அதன் பின்பாகவும் என்று இராமநாதன் குடியிருப்புக்குப் பல தடவைகள் சென்றிருக்கிறேன். முழுக்க முழுக்க கூடாரங்களாலான குடியிருப்பாய் அது ஒரு துயர் வீசும் குடியிருப்பாய் அடையாளம் காட்டுகிறது. நான் இரண்டாவது தடவையாக அந்தக் குடியிருப்பிற்கு சென்ற பொழுது கடும் மழை பெய்து ஓய்ந்திருந்தது. மழை ஓய்ந்த தருணத்தில் தாய்மார்களும் பெண்களும் ஒவ்வொரு கூடாரத்தின் மூன்பாகவும் அடுப்பை மூட்டி இருப்பவற்றை சமைத்துக் கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் அந்தத் தருணத்தை பாவித்து மண்வீடுகளை கட்டி பூக்கறை சொருகி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் ஒரு அனர்த்தகால குடியிருப்பைபோல காட்சி அளித்தது. மாற்றங்களும் முன்னேற்றங்களுமின்றி இன்று வரையில் இந்தக் குடியிருப்பின் அவலம் முடிவற்ற கதையாய் தொடர்கிறது.
வன்னியில் நிலப்பிரச்சினை மக்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் மிகவும் உலுப்புகிற காலத்தில் நிலத்தை வென்று வாழ்வுரிமையை மக்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். சாந்தபுரம்இ பொன்னகர்இ இரத்தினபுரம்இ இந்துபுரம் என்று நிலம் வென்ற சனங்களின் கதைகள் இன்றைய ஈழத்து மக்களின் வாழ்வியல் போராட்டத்தை பதிவு செய்திருக்கின்றன. இராமநாதன் குடியிருப்பு மக்களின் கதையும் வாழ்வியல் துயரும் இந்தக் கதைகளின் தொடர்ச்சியாய் தீர்க்கப்பட வேண்டிய அவசியம் மிகுந்தது. ஈழத்தில் இன்று வாழ்வும் நிலமும்தான் அதிகம் நெருக்கடியை எதிர்கொள்கிறது. நிலத்திற்கும் வாழ்வுக்கும் ஆபத்தான காலத்தை கடந்து கொண்டிருக்கிறோம். எல்லாச் சுமைகளையும் சுமந்து கொண்டு எல்லாப் பயணங்களையும் எல்லா அரசியல்களையும் சனங்கள்தான் கடக்க வேண்டியிருக்கிறது.
இராநாதன் குடியிருப்பு கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மருநகர் கிரராமத்தில் இருக்கிறது. கிளிநொச்சி நகரத்திற்கு நெருக்கமான ஒரு கிராமம். சுமார் அறுபது குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். வன்னி யுத்தத்தின் பின்னர் கடந்த 2010 ஜீன் மாதம் 7ஆம் திகதி மீள்குடியேற்றம் இங்கு நடைபெற்றது. சரியாக ஒரு வருடங்களைக் கடந்த நிலையில் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. தறப்பாள் கூடாரங்களிலிருந்து தகரக் கூடாரங்களுக்கு நகர்ந்த இந்த மக்கள் தறப்பாள் அவலத்திலிருந்து தகர அவலத்திற்குச் சென்றிருக்கிறார்கள். இப்பொழுது தகரக் கூடாரங்களால் தன்னை அடையாளப்படுத்தும் இராநாதன் குடியிருப்புக்குச் சென்ற பொழுது மக்களிடம் இருந்த துயரும் விரக்தியும் காத்திருப்பின் அவலமும் எல்லோரது வார்த்தைகளிலும் முகங்களிலும் பொங்கியது. வளர்த்தெடுக்கப்பட்ட வாழ்க்கை அழிந்துபோக எஞ்சியிருப்பதும் பெரும் ஆபத்தில் இருப்பதைப் போலான உணர்வு மக்களின் முகங்களில் தெரிகிறது.
இராமநாதன் குடியிருப்பு மக்கள் தமிழர்களின் தேசிய அரசியல் தலைவர் எனவும் அறிவுஜீவி எனவும் தமிழர்கள் போற்றிக் கொண்டாடுகிற சேர் பொன். இராமநாதன் அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் அறுபது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். சேர்.பொன். இராநாதன் அவர்களின் சிந்தனைப்படி தமிழையும் சைவத்தையும் வளர்க்கிற ஒரு குடியிருப்பாக இந்தக் குடியிருப்பு வளர்ந்து வந்திருக்கிறது. தெற்கில் இடம்பெற்ற இனக்கலவரங்கள் முதல் வடக்கு கிழக்கில் நடந்த போர் மற்றும் பல காரணங்களால் இடம்பெயர்ந்து நிலமற்ற தமிழ் மக்கள் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். இப்பொழுது நான்கு தலைமுறைகளை கடந்து ஐந்தாவது தலைமுறையில் இந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். நான்கு தலைமுறைகளாக அந்த மக்கள் நிலத்திற்காக உழைத்து வளம் பெருக்கியதால் இன்று தென்னைகளும் மாமரங்களும் பனைகளும் என்று பயன்தரும் விளைந்த கிராமமாக இருக்கிறது. அப்படி வாழ்ந்து வந்த நிலத்திற்ககாக இன்று மக்கள் தவிக்கிறார்கள்.
கிளிநொச்சியில் சேர் பொன் இராமநாதன் அவர்களுக்குச் சொந்தமான காணி நிலத்தில் மருதநகர்ப்பகுதியில் இருக்கிற இந்தக் குடியிருப்புக்குரிய மேட்டு நிலப்பகுதியுடன் வயல் நிலப்பகுதியும் இருக்கிறது. மேட்டு நிலப் பகுதியிலேயே மக்கள் இப்படி குடி வாழ்கிறார்கள். இந்த மக்கள் பரம்பரை பரம்பரையாக இந்த நிலத்தில் வாழும் உரிமை கொண்டவர்கள் என்கிற உறுதியோடு குடியேற்றப்பட்ட பொழுதும் அதற்காக வழங்கப்பட்ட ஆவணத்தை போரில் இழந்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்குரிய அரச காணிப் பத்திரமோ உறுதியோ இதுவரையில் வழங்கப்படவில்லை. வன்னியில் காலம் காலமாக வாழ்ந்த பல இடங்களில் மக்கள் இந்தப் பத்திரங்களை பெற்றிருக்காது வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இப்பொழுது நிலக்கொள்ளையடிப்புக் காலத்தில் வீட்டுத் திட்டத்தின் பொழுது காணிப்பத்திரம் அல்லது உறுதி தேவை என்கிற நிலையில் மக்கள் தாம் அறுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளை கடந்து வாழும் நிலத்தை தமக்கு பகிர்ந்தளிக்குமாறு கோருகிறார்கள்.
சனங்கள் எப்பொழுதும் சனங்களாகவே இருக்கிறார்கள். சட்டங்களும் அதிகாரங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து மறுப்புக்களையும் பாராமுகங்களையும் காட்டி இரக்கமற்ற வெளிக்குள் சனங்களைத் தள்ளுகின்றன. மக்கள்தான் எல்லாத் துயர்களுக்கும் முகம் கொடுக்கிறார்கள். இராமநாதன் குடியிருப்பு மக்களின் இன்றைய அவலத்தில் நுண்ணியதான எல்லா அரசியல்களும் மறுப்புக்களும் பாராமுகங்களும் ஒடுக்குமுறைகளும் கலந்திருக்கின்றன. இந்த மக்களைப் பார்க்கையில் ‘இப்படியும் நாம் போராடும் காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்’ என்றே கோபமே ஏற்படுகிறது. நமது சனங்களின் வாழ்வும் மனவெளிகளும் மிகச் சொற்பமாகக் கூட மதிக்கப்படுவதில்லை. சனங்கள் எப்படிப் போனால் என்ன? நாம் நமது தொழிலைச் செய்வோம் என்கிற வக்கிரம்தான் எங்கும் ஆள்கிறது. தமிழ் தேசிய இனத்தின் இருப்பு சிதைக்கப்படும் ஒரு காலத்தில் நாம் எதைச் செய்ய வேண்டும் என்பதும் எதை செய்யாதிருக்க வேண்டும் என்பதும் தமிழ் இனத்தின் இருப்பை பாதுகாப்பதாய் அமைய வேண்டும். ஏனெனில் இது இனத்திற்கும் நிலத்திற்கும் நெருக்கடியான காலம்.
நாம் இராமநாதன் குடியிருப்பு மக்களின் விவகாரத்தில் நம்பிக்கை கொள்ளலாம். இராமநாதனின் பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் சபையின் தலைவராக பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் பதவி வகிக்கிறார். அவரிடத்தில் இந்த நில விடயத்தில் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பேராசிரியர் இந்தக் காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க சம்மதித்து மக்களின் கைகளில் அதற்கான பத்திரம் ஒன்றையும் வழங்கியுள்ளார். “குடியிருக்கும் காணிக்கான அத்தாட்சிப் பத்திரம்” என்று தலைப்பிடப்பட்ட அந்தப் பத்திரத்தில் “இக்காணியின் குடியிருப்பு நிலத்தில் எமது நிதியத்தின் பூரண அனுமதியுடன் பல வருடங்களுக்கு மேலாக மருதநகர் கிராம மக்கள் வசித்து வரும் நிலையில் அவர்களது எதிர்கால நலன் கருதி மனிதாபிமான அடிப்படையில் அம்மக்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருக்கும் நிலங்களை அம்மக்களுக்கு சொந்தமாக பகிர்ந்தளிக்க எமது நிதியம் முன் வந்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதுடன் குடியிருப்பாளர் நிரந்தர குடியிருப்பாளராக ஆண்டு அனுபவிக்கவும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கவும் பூரண அனுமதியை வழங்குகிறோம். காலக் கிரமத்தில் சட்ட ரீதியான ஆவணத்தை அவர்கள் பெற்றுக் கொள்ள எமது நிதியம் ஒத்துழைப்பு வழங்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படியான பத்திரங்கள் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு இராநாதன் முன்பள்ளி திறப்பு விழாவும் காணிப் பத்திரம் வங்கலும் என்று நடத்தப்பட்ட நிகழ்வில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து அந்த மக்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் தயாராகின. வீட்டுத் திட்டத்திற்கான கோவை முழுமையாக உதவி அரச அதிபர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து கரைச்சிப் பிரதேச காணி அலுவலர் இராமநாதன் குடியிருப்பிற்கு விஜயம் மேற்கொண்டு காணிகளை மேற்பார்வையிட்டார். வீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்றும் காணியின் மூல ஆதாரத்தில் மாற்றம் செய்து மக்களுக்கு அதற்குரிய ஆவணத்தை வழங்க முடியும் எனவும் மக்களிடத்தில் தெரிவித்துள்ளார்.
அப்படி எனில் இந்த மக்களிடத்தில் இப்பொழுது துயர் மோதுவது ஏன்? இந்தக் குடியிருப்பில் அவலம் வீசுவது ஏன்? இருப்புக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமில்லாமல் ஆபத்து நேர்ந்ததைப்போல இந்த மக்களின் முகக் கோடுகள் துடிப்பது ஏன்? வீட்டுத் திட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகிய பொழுது காணி அலுவலர் கையப்பமிட மறுத்திருக்கிறார். ஏன் என்று தெரியாமல் மக்கள் பேரதிர்ச்சியடைந்தார்கள். மக்களின் கோரிக்கையை புரிந்து அதற்கு சம்மதித்து மனிதாபிமானத்துடன் பத்திரத்தில் பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் ஒப்பமிட்டிருக்கிறார். அப்படியிருக்க வீட்டுத்திட்டம் திடீரென தடுத்து நிறுத்திய பொழுது மக்களின் துக்கமும் நீண்ட நாள் கோரிக்கையும் அது நிறைவேறி வாழ்வு பற்றி பிறந்த நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்று மோதி சனங்களில் நிலத்துயராய் வீசியது.
சனங்கள் சனங்களாகவே இருக்கிறார்கள் என்பதை திரும்பவும் திரும்பவும் சொல்ல வேண்டியிருக்கிறது. வன்னி யுத்தத்தின் முன்பாகவும் வாழ்ந்து வரும் நிலத்தை தமக்கு பகிர்ந்தளிக்கும்படி கோரிக்கையை விடுத்து வந்த இந்த மக்கள் மீண்டும் யுத்தத்தின் பிறகு உயிர்இ அங்கம்இ உடமை என்று எல்லாவற்றையும் இழந்து மீண்டும் நிலத்திற்கு வந்த பிறகும் கோரிக்கையை விடுத்தார்கள். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு பத்திரம் வழங்கப்பட்ட பிறகும் மறுக்கப்பட்ட இன்றைய சூழலில் மீண்டும் கோரிக்கையை விடுகிறார்கள். இந்த மக்களின் வார்த்தைகளுக்கும் முகங்களுக்கும் மனிதாபிமானத்தின் கண்கள் அவசியம் திறக்க வேண்டும். பரம்பரை பரம்பாரையாக வாழ்ந்து வந்த நிலத்தில் யுத்தத்தில் அழிந்த வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இந்த மக்கள் வீடற்ற நிரந்தர துயருக்குள் தள்ளப்படுவார்கள். இவர்களிடம் இனியும் அவலத்தை தாங்கும் சக்தி இல்லை. இந்த மக்களின் கதைகள் இன்றைய காலத்தின் பெருந்துயராய் வீசுகிறது.
இந்தக் குடியிருப்பில் பார்த்த இளந்தாய் ஒருத்தியின் வார்த்தைகளின் நிராதரவும் கையறுத் துயரும் மிகக் கொடியதாயிருந்தது. பிரதீபா தெய்வேந்திரராசா என்கிற இளம்தாய் கணவனை யுத்தத்தில் பறிகொடுத்துவிட்டு கல்லுடைக்கும் தொழிலுக்கு செல்கிறார். அதன்மூலம்தான் தன் ஒரே பெண் குழந்தையை வளர்த்து வருவதாக சொன்னார். ‘அவர் ஷெல்லடியில் செத்துப் போயிற்றார்’ என்பதுதான் முதலாவது வார்த்தையாக இருந்தது. அம்மாவுடன் இருக்கிறேன். விடியப்போனால் பின்னேரம்தான் திரும்புவது. சரியான கடினமான வேலை கஷ்டமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 300 ரூபா சம்பளம் தருகிறார்கள் என்று சொல்கிறார். வன்னிச் சனங்கள் இன்று இழக்க முடியாது போராடுவது நிலத்திற்காக மட்டுமே. அவர்கள் யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். அன்றாட வாழ்வை நகர்த்த நடத்தும் போராட்டத்தையே இன்று வாழ் நிலத்திற்காய் நடத்தும் போராட்டம் உலுப்புகிறது.
வாழ ஒரு வீடு வேண்டும். எங்களால் வீடு கட்ட இயலுமா? யுத்தத்தில் அழித்தவர்கள்தானே அதைக் கட்டித்தர வேண்டும் என்ற மக்களின் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் பெரும் ஆபத்தில் உள்ளன. வீடற்று துயர்ப்பட்ட மக்களின் கதியை ஒரு மழைக்காலத்தில் பார்த்திருக்கிறேன். அன்று சில உடைந்த வீடுகளில் தற்பாள்களை போர்த்திக் கொண்டிருப்பவர்கள் மழை நீரை அள்ளி வெளியில் விட்டுக் கொண்டிருந்தார்கள். கூரையில்லாத வீடுகளுக்கு மேலால் மழை பெய்யும் பொழுது எப்படி பாத்திரம் ஏந்தி தடுப்பது என்றுதான் தோன்றியது. பொழுது முழுக்க இந்த மழைத் தண்ணீருடன் இவர்கள் போராட வேண்டியிருந்தது. கூடாரங்களில் இருப்பவர்களுக்கு சுவரில்லை. சில வீடுகளுக்கு சுவர் இருந்தும் கூரையில்லை. இப்படித்தான் துயரம் எல்லா பக்கங்களாலும் இராமநாதன் குடியிருப்பு குடிகளின்மீது அடித்துக் கொண்டிருந்தது. வாழ்வதற்கான அடிப்படை வசதிகளற்ற நிலையில் மழைக்கால அனர்த்தில் சிக்கிய ஒரு தற்காலிகமான குடியிருப்பைப்போல காட்சியளித்தது. இந்தத் துயரங்களை பார்த்துக் கொண்டு எப்படி கண்களை மூடிக் கொள்வது?
இந்தக் குடியிருப்பில் வாழும் சனங்களையும் போர் தாக்கி வாழ்வை சிதைத்திருக்கிறது. சனங்களையும் வெறும் நிலத்தையும் தவிர ஒன்றும் இந்த மக்களிடத்தில் இல்லை. ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு வகையில் இழப்பின் எல்லையை கடந்து போயிருக்கிறார்கள். போர் ஏற்படுத்திய வடுவை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவபாலன் லங்காதேவி தம்பதிகள் தங்கள் மகன் தடுப்புமுகாலில் இருக்கிறார் என்றும் அவரது மகனின் மனைவி செல்தாக்குதலில் இறந்து விட்டார் என்றும் குறிப்பிட்டார். ஏழு பிள்ளைகளை வைத்துக் கொண்டு இந்த தகரக் கூடாரத்தில் என்ன செய்வது? என்று அல்லாடிக் கொண்டு வாழ்வதாக அவர் குறிப்பிட்டார். முகாமில் இருந்து கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்து உயிர்பிச்சை கேட்டு சென்ற அதே நிலமையுடன்தான் இப்பொழுது இந்தக் கிராமத்திற்கு வாழ்வதற்கு திரும்பியுள்ளதாகவும் சொல்கிறார். எங்களுக்கு இந்தக் காணி நிலமும் வீடும் கட்டித் தந்தால் நாங்கள் மீண்டும் உயிர்ப்போம் என்று குறிப்பிடுகிறார்.
சந்தனதோமஸ் சூசைமேரி என்கிற வயது முதிர்ந்த தம்பதிகள் ஒரு தகரக் கூடாரத்திற்குள் இருந்தார்கள். மழைக்காலத்தில் சென்றிருந்த பொழுது தறப்பாள் கூடாரத்திற்குள் இருந்தார்கள். சந்தனதோமஸ் இராமநாதன் குடியிருப்பிற்கு 1935 இலேயே வந்திருக்கிறார். தெற்கில் மலையகத் தோட்டப் பகுதியில் சிங்களவர்களுடன் ஏற்பட்ட இன மோதலால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாலே இங்கு வந்ததாக சந்தனதோமஸ் குறிப்பிட்டார். சில தடிகளில் தறப்பாளை இழுத்து கட்டி விட்டு சூசைமேரி அம்மா சமைத்துக் கொண்டிருந்த கட்சி மழைக்காலத் துயராயிருந்தது. வயது முதிர்ந்த நிலையில் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படும் இந்த வாழ்வு பெரும் அசௌகரியமாக இருப்பதாக அவர்கள் மனமுடைந்து சொல்கிறார்கள். இந்த மனத்துயரை எப்படி நிராகரித்துவிட முடியும்?
கோவிந்தன் கடைச் சந்தி என அழைக்கப்படும் சந்தியில் நீர்ப்பாசன அலுவலகமும் சில மரக்கறிக்கடைகளும் தேனீர்க்கடைகளும் பல்பொருள்கடைகளும் இருக்கின்றன. இரணைமடுக் குளத்திலிருந்து வரும் பிரதான நீரோடும் ஆறு இந்தச் சந்தியில் இரண்டாகப் பிரிந்து கிளிநொச்சிக்குக் குளத்திற்கும் பன்னங்கண்டிக்கும் செல்கிறது. அந்தப் பகுதியின் செழிப்புக்கும் உயிர்ப்புக்கும் அந்த நீரோடும் ஆறு பிரதானமானது. இந்தச் சந்தி கடந்த யுத்தத்தில் முற்றாக அழிந்து போனது. இப்பொழுது கோவிந்தன் கடைச் சந்தி உயிர்பெற்று வருகிறது. வட்டக்கச்சிஇ பன்னங்கண்டிஇ மருநகர் போன்ற கிராமங்களில் வயல் வேலைகளுக்குச் செல்லும் மக்களின் இளைப்பாறும் சந்தியாக இந்தச் சந்தி முக்கியம் பெற்றிருக்கிறது. ஏழைக் கூலித் தொழிலாளி மக்கள் ‘கோவிந்தன் கடைச்சந்தியை’ உச்சரிக்கும் விதமே மிக அழகாக இருக்கும். அந்தச் சந்தியில் சாள்ஸ் அன்டனி பிரிவு மாவீரர்களுக்கு அமைக்கப்பட்ட மாவீரர் நினைவு மண்டபம் இப்பொழுது தூள்தூளாக அழிக்கப்பட்டு இராணுவ முகம் நிறுவப்பட்டிருக்கிறது.
இராமநாதன் குடியிருப்பில் இருந்த முன்பள்ளி நிலத்தோடு அழிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த முன்பள்ளியை அமைக்க அந்தப் பகுதியின் கமக்கார் அமைப்பு உதவியிருக்கிறது. அங்குள்ள மக்களில் அநேகமானவர்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்திருக்கிறார்கள். பலரது நிரந்தரமான சீமென்ட் வீடுகள் உடைந்தும் கூரையற்றும் கிடக்கின்றன. பல பிள்ளைகள் யுத்தத்திலும் அதன் பாதிப்புக்களிலும் படித்து பல்கலைக்கழங்கள் வரை சென்றிருக்கிறார்கள். பலரது வாழ்வு யுத்தத்தின் தாக்கத்தால் மீள முடியாதிருக்கிற சூழலில் இருக்க சிலர் படித்து முன்னேறி முன் மாதிரியானவர்களாகவும் செயற்படுகிறார்கள். இந்த மக்களின் வாழ்க்கைக்கு இடப்பட்ட அத்திவாரம் எனப்படும் கருத்தும் கல்வியும் சிந்தனையும் மிக முக்கியமானது. இந்த மக்களின் இன்றைய வாழ்வு வரை அந்த அத்திவாரம்தான் இயங்குகிறது. அதுவே இந்த மக்களின் வாழ்க்கை கதையுமாக முக்கியமாகிறது.
தம்பு விஜயரத்தினம் யாழ்ப்பாணத்தில் கொக்குவிலைச் சேர்ந்தவர். இந்தக் குடியிருப்பின் ஒரு முன்னோடியாகவும் தலைவராகவும் மக்களின் வாழ்வில் முன்னேற்றங்களை உருவாக்க இந்தக் குடியிருப்புக்கு வந்தவர். சைவமும் தமிழும் கணிதமும் என்று இந்தக் குடியிருப்பு மக்களின் கல்வியை முன்னேற்ற வேண்டும் என்கிற இலக்கோடு இறுதிவரை வாழ்ந்தவர். இந்த மக்களின் எல்லா விசயங்களுக்காவும் நின்று இயங்கியவர். ‘அய்யா இருந்தால் நாங்கள் இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்’ என்கிற அந்தச் சனங்களின் வார்த்தைகள் அவருக்கு மக்களிடத்தில் இருக்கிற முக்கியத்துவத்தையும் அவர் மக்களிடம் கொண்டிருந்த அன்பையும் அவரது வாழ்வையும் வெளிப்படுத்துகிறது. சைவத் தமிழை வளர்க்க சேர் பொன் இராமநாதனின் மருமகன் செனட்டர் நடராசா என்பவர் தம்பு அய்யாவை இங்கு அழைத்து வந்து குடியேற்றியதுடன் அவரே சைவத் தமிழை வளர்க்க மக்களையும் குடியேற்றியுள்ளார்.
இராசதுரை நாகநாதன் இந்தக் குடியிருப்பில் வாழும் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். தனது அம்மம்மாவான குழந்தை வேலு கண்ணகை 1947இல் சேர் பொன் இராமநாதனின் மருமகன் செனட்டர் நடராசானால் கொண்டு வந்து குடியேற்றப்பட்டவர் எனவும் அவர்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருக்கலாம் என்பதற்கான பத்திரத்தை சேர். பொன். இராநாதன் வழங்கினார் எனவும் அதை அவர்கள் யுத்தத்தில் தவற விட்டுவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டார். சிலர் ஐந்தாவது தலைமுறையாகவும் இந்தக் குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தம்பு அய்யா குழந்தைகளுக்கு தமிழ்இ சைவம்இ கணிதம் முதலிய பாடங்களை கற்பித்ததுடன் வளர்ந்தோருக்கும் அவற்றை கற்பித்திருக்கிறார். இராசதுரை நாகநாதன் தம்பு அய்யாவிடம் கல்வி கற்றவர். தம்பு அய்யா திண்ணைக் கல்வி முறையில் இந்தக் கிராம மக்களுக்கு அவசிமான பாடங்களான தமிழ்இ சைவம்இ கணிதம் முதலிய பாடங்களை கற்பித்துள்ளார். இந்தப் பாடங்களைக் கற்றிருக்க வேண்டும் அப்படிக் கற்றிருந்தால்தான் அவர்களின் வாழ்கை சிறக்கும் எனவும் கருதிச் கல்வி கற்பித்திருக்கிறார். 1968இல் இந்தக் குடியிருப்பில் சேர் பொன் இராமநாதன் முன்பள்ளியையும் ‘சேர். பொன். இராமநாதன்’ நினைவாக தம்பு அய்யா நிறுவியுள்ளார்.
தலமைகளும் பெரியவர்களும் இல்லாத இந்தக் காலத்தில் மக்கள் தவிப்பார்கள் என்பது இந்தக் குடியிருப்பை மையமாக வைத்துப் பார்க்கிற பொழுது இன்னும் துலக்கமாகிறது. 1985ஆம் ஆண்டில் தனது 85ஆவது வயதில் தம்பு அய்யா இறந்து போனார். இந்த மக்களின் வாழ்வோட்டத்தில் அதன் செழிப்பில் வாழ்வு நாட்களில் கலந்திருந்த அவர் இல்லாமல் போனது ஒரு இடைவெளியையும் அநாதரவையும் தோற்றுவித்திருக்கிறது. கிளிநொச்சி இடப்பெயர்வுக்கு முன்னதாக அவர் இறந்து போனார் என்பது அந்த நிலத்தோடு அவர் வாழ்ந்த வாழ்வின் நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கிறது. இப்பொழுது இரண்டு மாபெரும் படையெடுப்புக்களுக்கும் ஒரு மாபெரும் வன்னி யுத்த அழிவுக்கும் முகம் கொடுத்த மக்கள் இன்றைய காணிப் பிரசச்சினையால் வாழ்வை தொடரஇ இழந்ததை கட்டி எழுப்ப முயல என்று எதையும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதை எப்படி கைவிட முடியும்?
இராமநாதன் முன்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார் கவிதா செல்வரத்தினம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். முன்பள்ளி இயங்கும் காணிக்கும் ஆவணப் பத்திரம் இல்லை என்று குறிப்பிடும் கவிதாஇ ‘காணிப் பத்திரம் வழங்கினால்தான் எதையும் செய்ய முடியும்’ எனச் சொன்னார். மக்களின் வாழ்வோடு இந்தக் குழந்தைகளின் வாழ்வும் மகிழ்ச்சிக்கும் இயல்புக்கும் திரும்பவதில் இது அவசியமானது எனவும் எதிர்வரும் மழைக்காலத்திற்கு முதலில் இந்தக் கிராமத்தின் வாழ்க்கை மற்றம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். சேர். பொன். இராமநாதன் முன்பள்ளியில் 32 குழந்தைகள் படிக்கிறார்கள். முன்பள்ளிக் கட்டிடத்தையும் வெறும் முற்றத்தையும் தவிர ஏதுமில்லை என்றார் கவிதா.
இந்தக் கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர் பத்மநாதன் ராஜேஸ்வரி. எனது கணவர் தற்கொலை செய்து இறந்து விட்டார் என்று குறிப்பிட்ட ராஜேஸ்வரிக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். எனது பிள்ளைகளும் இங்குதான் பிறந்தார்கள் என்றும் நாங்கள் பரம்பரை பரம்பரையாக பிறந்து வாழ்வதற்கு காணிப் பத்திரம் இல்லையே தவிர இங்குதான் பிறந்தோம் என்கிற தலைமுறைகளை உறுதி செய்யும் பிறப்புப் பத்திரங்கள் உள்ளன என்றும் ராஜேஸ்வரி சொன்னார். நானும் எனது குழந்தைகளும் வாழ இந்த நிலமும் வீடும் வேண்டும் என்று மிக உருக்கத்தோடு கேட்கிறார். பேராசிரியர் சி.கா. சிற்றம்பலத்தால் வழங்கப்பட்ட காணிப் பத்திரத்தை நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக் கொண்டோம் என்றார் சாதசிவம் தேவி. வீடு விரைவில் கட்டித் தரப்படும் என்கிற நம்பிக்கையோடு இருந்தோம். ஆனால் ஏன் இப்பொழுது மறுக்கப்படுகிறது? என பெருமூச்சோடு கேட்டார்?
முன்பள்ளித் திறப்பு விழாவும் காணி அத்தாட்சிப் பத்திர வழங்கல் விழாவும் நடந்த பொழுது நிகழ்வில் பிரதம அதிதியாக பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் கலந்து கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தின் கிளிநொச்சித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்இ கிராம அலுவலர்களான எஸ். இந்திரன்இ திருமதி தசவரதன்இ கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் அ. பங்கயற்செல்வன் முதலியோர் கலந்து கொண்டார்கள். இராமநாதன் குடியிருப்பு கிராம சங்கத் தலைவர் அ.சத்தியானந்தன் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் பரமேஸ்வரா நிதியத்தின் உத்தியோக பூர்வத் தாளில் எழுதி பேராசிரியரால் ஒப்பமிடப்பட்ட காணிப் பத்திரங்களை மக்களுக்கு வழங்கி விரைவில் காணி உறுதியையும் பெற்றுத் தருவேன் என வாக்களித்தார். மக்கள் மிக நம்பிக்கையுடன் ஆறுதலடைந்தார்கள். அந்தப் காணிப் பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் அதை செய்ய கரைச்சிப் பிரதேச காணி அலுவலர் மறுத்திருப்பது ஏன்?
மக்கள் தொடக்கப் புள்ளிக்கே தூக்கி எறியப்பட்டுள்ளார்கள். மக்கள் மக்களாகவே இருப்பதால் என்ன செய்ய முடியும்? மீண்டும் மிக தாழ்மையுடன் கோரிக்கைவிடவே முடியும். இராமநாதன் குடியிருப்பு மக்கள் பேராசிரியர் சிற்றம்பலத்திற்கு ஒரு கடிதத்தை எழுதியதாக கொடுத்தார்கள். அந்தக் கடித்தில் முழுக்க முழுக்க விரக்தியின் வார்த்தைகளும் இன்றைய வன்னி மக்களின் துயரங்களும் நிறைந்திருந்தன. இன்றைய காலத்தின் வரலாற்றின் இன நில நெருக்கடியில் பொறுத்துப் போன ஒரு காலத்தில் எழும்பும் அவலக் கடிதமாக இருந்தது. எங்களை புரிந்து எமக்காக வாக்களித்தபடி அந்தக் காணியை தந்து உதவுங்கள் என்று தாழ்மையும் கோரிக்கையும் மதிப்பும் அதிகமாக உள்ள அந்தக் கடிதம் இயல்பான வாழ்க்கைக்கு உதவும்படி மனிதாபமான அடிப்படையில் கோருகிறது. நீங்கள்இ தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் தமிழ் அரசுக் கட்சிக்காக தந்தை செல்வா வழியில் உழைத்து வருபவர். மொத்த தமிழ் இனத்திற்காக உழைத்து வரும் நீங்கள் எங்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அந்தக் கடிதம் சுமந்திருக்கிறது.
தாங்கள் வாழத் துடிப்பதாக அந்த மக்கள் சொல்கிறார்கள். “போரின் வலிகளையும் அதன் அவலத்தையும் சுமந்து நாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த நிலத்தில் ஒரு வீடு கட்டி எஞ்சிய உறவுகளுடன் வாழத் துடிக்கிறோம். நீங்கள் சேர்.பொன். இராமநாதன் அவர்களின் சிந்தனைப்படி கல்விஇ அரசியல் சிந்தனைகளை அடிக்கடி எடுத்துரைத்து செயற்படுத்தி வரும் நிலையில் எங்களது வாழ்வுரிமையில் அக்கறை காட்ட வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு வேண்டுகிறோம்” என அந்த மக்கள் நிலத்திற்காய் தவிப்போடு கேட்கிறார்கள். தனது நிலங்களை சமூகத்திற்காக சமூக நிறுவனங்களுக்காக சேர்.பொன். இராமநாதன் அவர்கள் வழங்கியவர்.
இன்று அவரது நிலத்தில் அவரது சிந்தனையின்படி குடியிருத்தப்பட்ட மக்கள் தவிப்பதை பார்க்கவும் ஒட்டுமொத்த தமிழ் இனமானது அரசியல்இ உரிமைஇ நில ஏதிலிகளாய் இருப்பதைப் பார்க்கவும் இன்று அவரும் இல்லை. சிங்கள மக்களாலும் சிங்களத் தலைவர்களாலும் கொண்டாடப்பட்ட சேர்.பொன். இராமநாதன் இன்று உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்வார்? என்ன சொல்வார்? என்பது எல்லோருக்குமே தெரியும். இலங்கை ஈழ அரசியல் வரலாற்றில் இன நெருக்கடியிலும் முறிவிலும் அவரால் காட்டப்பட்ட நல்லெண்ணங்களும் செய்யப்பட்ட வேலைகளும் உறவும் பங்களிப்பும் ஈழத்தவரது நடவடிக்கைகளில் சிறந்த எடுத்துக்காட்டாயிருக்கின்றன. ஆனால் எதைச் செய்தோம்? என்ன நடந்தது? என்பதுதான் அந்த அரசியலின் சாரம். கொழும்பில் சிங்களவர்களால் அவர் பல்லக்கில் தூக்கப்பட்ட காலத்தை அவர் வழங்கிய பொழுது இன்று தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே வாழ முடியாத காலத்தை எங்களுக்கு சிங்ள அரசுகள் பரிசளித்திருக்கின்றன. இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? என்பதும் நமது அரசியல் வரலாற்றுக் காலத்தைப் பொறுத்து முக்கியமானது.
இராமநாதன் குடியிருப்பு மக்களுக்கு அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த காணிகளை பகிர்ந்தளிக்க பரமேஸ்வரா நிதியம் முன்வந்ததையும் அந்த மக்கள் நிரந்தர உறுதி ஆவணங்களை பெற அந்த நிதியம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஏன் இந்த மக்களின் வீட்டுத் திட்டம் இழுத்தடிக்கப்பட்டு அவலம் தொடர்விக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர விரல் காட்டிக் கொண்டு மக்களை துயரத்தின் எல்லை வரை இழுத்துக் கொண்டு போகிறார்கள். இந்த வியடத்தில் மக்களின் வாழ்வுரிமைக்கான ஆவணத்தை வழங்கியுள்ள பேராசிரியர் சி.கா. சிற்றம்பலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்து வருபவர் என்கிற அடிப்படையில் இந்த மக்களின் துயரத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏதோ ஒரு காரணங்களை உருவாக்கிக் கொண்டும் யாரோ ஒருவரது கட்டளையை தலை மேல் கொண்டும் காணி நிலத்தை அள்ளிச் செல்லும் வழியைத் தேடும் அபகரிப்பு நடவடிக்கைதான் வன்னியில் கொடும் பசியுடன் அலைகிறது. மக்களின் வாழ்வுப் பசி அவர்களிடத்தில் மிகச் சாதாரணமானது. மக்களின் வாழ்வுப் பசியை ஏற்றுக் கொள்ளவும் வாழ்வுரிமையை மதிக்கவும் அவர்களால் முடிவதில்லை. மக்களின் அவலத்தை சாதாரணமாக மதிப்பிடுவதும் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் எத்தகைய கொடுமை? மக்கள் எப்பொழுதும் மக்களாக இருப்பதினாலேயே தமது வாழ் நிலத்திற்காகத் தவிக்கிறார்கள். மக்களின் தவிப்பை தெரிந்தும் புரிந்து கொள்ளாததுபோலவும் இந்தத் துயரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு கண்மூடியிருப்பதைப்போலவும் இருப்பதைவிட வேறு என்ன பயங்கரமானது? தமிழ்மன்
தீபச்செல்வன்
deebachelvan@gmail.com

Geen opmerkingen:
Een reactie posten