தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 augustus 2011

தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக 'அவசரகால விளைவு விதிகள் சட்டம்' அறிமுகம்!

[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 06:47.52 AM GMT ]
அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நீக்கப்பட்டுள்ள நிலையில், தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக  'அவசரகால விளைவு விதிகள் சட்டம்' எனும் பெயரில் புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சந்தேக நபர்களை கையாள்வதற்காக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
2005 ம் ஆண்டு அமுலிலிருந்த அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இந்நிலையில், பயங்கரவாத தமிழ் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவசரகால சட்டம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அச் சந்தேக நபர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  ஆனால் அரசாங்கம் அவர்கள் தமிழர்கள் என்றநிலையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த புதிய சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அச்சட்டமூலத்தை வரையும் நடவடிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது.
அதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டமும் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten