தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 31 augustus 2011

இம்சை அரசன் 23ம் புலிகேசியின்: ஜாதிச்சண்டை மைதானம் பார்தது உண்டா ?

31 August, 2011
பிரித்தானியாவில் தற்போது தோன்றியுள்ள குழுக்களும் அதன் செயல்பாடுகளும் பற்றி கொஞ்சம் பேசலாமா ? நீங்க ரெடியா ? நாங்களும் தான் .. வாங்க விடயத்துக்குப் போகலாம். லண்டனில இப்ப புதுசா முளைவிட்டுள்ள புதிய பிரச்சனை என்ன தெரியுமா, இங்க நடக்கும் விழா, நினைவு தினம் விளையாட்டுப்போட்டி இதை எல்லாத்தையும் யார் நடத்துவது எண்டுதான். 15 தொடக்கம் 20 வருஷமா நடக்கும் தமிழீழம்சார் எழுச்சி நிகழ்வுகளைக் கூட இப்ப புதுசா ஒரு கோஷ்டி தாம்தான் நடத்தவேண்டும் என்று சொல்வதும், தாங்கள் நடத்தாமல் பழைய செயல்பாட்டாளர்கள் நடத்தும் நிகழ்வுகளைக் குறைகூறி மின்னஞ்சல் அனுப்புவதும் இல்லை தமக்குச் சார்பான இணையங்களில் அதனைப் பிரச்சுரிப்பதும் பெஃஷன் ஆகிப்போச்சு சாமி !

சுமார் 20 வருஷமா லண்டனில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள் நடத்தும் தமிழர் விளையாட்டு விழாவைப் பற்றியும் அங்கே ஏற்றப்பட்ட தேசியகொடி பற்றியும் சமீபகாலமா சில விஷமிகள் புரளியைக் கிழப்பிவிட்டுக்கொண்டு உள்ளனர். அதற்கு 3 எழுத்துக் கொண்ட TV யும் களம் அமைத்துக் கொடுக்க, அதில் வெள்ளையும் சொள்ளையுமாகச் சென்று 2பேர் ஏறி விளையாட்டு விழாவில் கொடி ஏற்றிய விதம் படு பிழை என்று சொல்லியுள்ளனர். அரசியல் என்றால் என்ன தேசியகொடிக்கும் விடுதலைப் புலிகளின் கொடிக்கும் என்ன வித்தியாசம் என்று சற்றும் தெரியாத இவர்களை மேடை ஏற்றி வேடிக்கை பார்க்கிறது இந்த 3 எழுத்து TV. இல்லை இல்லை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஊட்டவே இவர்கள் முனைகிறார்கள் என்பது தான் சரி.

அதாவது சமீபத்தில் லண்டனில் நடந்த 16 வது விளையாட்டு விழாவில் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தேசிய கொடியை ஏற்றும்போது சரியான முறைப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லையாம். கீழே நீங்கள் பார்ப்பது தான் சம்பந்தப்பட்ட புகைப்படம்.



தேசிய கொடி வெள்ளிக் கம்பத்தில் இருக்கவேண்டும் அது மடிப்புக் கலையாது தட்டில் வைக்கப்பட்ட பின்னர் ஏற்றப்படவேண்டும் என்று எல்லாம் எழுதி இறுதியில் இவ்வாறு பிழை நடந்தமைக்கு ஏற்பாட்டாளர்களே காரணம் என்று ஒரு கோஷ்டி தொடர்ந்து மின்னஞ்சலை அனுப்பியும் தமக்கு ஆதரவான இணையங்களில் இச் செய்தியை பிரசுரித்தும் வருகிறது. விளையாட்டு விழாவில் தேசியகொடியை ஏற்றும்போது அவ்விடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பரேமேஸ்வரனும் உடன் இருந்தார். தேசியகொடிக்கு மிவும் உயர்வான மரியாதை கொடுத்து அதனை ஏற்றிவைத்தார் பரமேஸ்வரனும் எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இக் கோஷ்டியின் விதண்டாவாதங்கள் முடிந்ததாக இல்லை.

23ம் புலிகேசி என்னும் படத்தில் மன்னனாக நடித்த வடிவேலு ஜாதிச் சண்டைக்கு ஒரு மைதானத்தையே திறந்துவைத்து அதனை ஊக்குவித்தான். அதுபோல நீண்டுசெல்கிறது இந்தக் கோஷ்டியின் வியாக்கியானம். இதனைப் பின்னே நின்று இயக்குவது யார் என்று ஆராய்ந்தால் அதில் நாடுகடந்த நபர்களும், தாம் தான் இனிப் பிரித்தானியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறோம் என்று கூறும் தறு(தலை) கோஷ்டியுமே இதன் பின்னணியில் உள்ளனர். அதனால் நாடுகடந்த அரசின் பிரதமர் மாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசிய கொடியை எவ்வாறு ஏற்றினார் ? இல்லை அவர் சரியாகத் தான் ஏற்றினாரா ? (என்று நாம் கேட்கவில்லை) மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் அதனை இங்கே எழுதி இருக்கிறோம் அவ்வளவுதான் !

மாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசியகொடியை பிழையாக ஏற்றும்போது ஏன் எவரும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டு விழாவில் தேசியகொடி முறைகேடாக ஏற்றப்பட்டிருக்கிறது என்று குரைக்கும் சிலரைப் பார்த்து தமிழீழ மக்கள் கேட்கிறார்கள். இக் கேள்வியில் நியாயம் உள்ளது. அதனால் அதிர்வு இதனைப் பிரசுரிக்கிறது அவ்வளவுதான். விளையாட்டு விழாவில் தேசியகொடியை முறைகேடாக ஏற்றினர் என வாய் கிழியக் கத்தும் கணவான்மார்களே இதற்கும் பக்கம் பக்கமாக ஏதாவது விளக்கம் சொல்லக்கூடாதா ?





Geen opmerkingen:

Een reactie posten