தமிழகத்தின் தலைநகர் சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் Zee தமிழ் தொலைக்காட்சிக்கு இலங்கையின் தலைநகர் கொழும்பிலும் வடக்கு கிழக்கிலும் திடீர்த் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அலைவரிசையில் இலங்கையின் இறுதிப் போர் தொடர்பாக தொடர்ச்சியாக ஒளிபரப்பாகும் ஆவணப்படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்ற நிலையிலேயே ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் செய்மதி ஒளிபரப்பை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து அவை Zee தமிழ் ஒளிபரப்பைத் தவிர்த்துக்கொண்டுள்ளன. அதேவேளையில் வடபகுதியில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பை மேற்கொள்பவர்களுக்கு இராணுவம் இது தொடர்பில் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten