தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 augustus 2011

சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து அகற்றுவதற்கு சூழ்ச்சி? சனல் 4 காணொளியில் தோன்றியவர் ருவாண்டா படைவீரராம்!

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 02:01.52 AM GMT ]
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக செயற்பட்டு வரும் சவேந்திர சில்வாவை பதவியிலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சனல்4 தொலைக்காட்சி சேவையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமெரிக்கப் பிரிவினரும் இணைந்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ருவாண்டா படைவீரர் ஒருவரினால் போர்க் குற்றச்செயல் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களே, அண்மையில் 58ம் படைப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் வெளியிட்டதாக சனல்4 தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புச் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலம்பெயர் புலி அமைப்பினர் பெரும் தொகையான பணத்தை செலவிட்டு இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஓர் கட்டமாகவே சனல்4 ஊடகத்தின் ஜொனதன் மில்லர் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஜொனதன் மில்லர் சுற்றுலாப் பயணி என்ற போர்வையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனல்-4 அதிகாரிகளுடன் சவேந்திர சில்வா சந்திப்பு
இலங்கையின் கொலைக்களங்கள் என்ற போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சனல் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
மனித உரிமை பேரவை மாநாட்டில் உரையாற்றிய சவேந்திர சில்வா இலங்கையின் கொலைக்களங்கள் என்ற பெயரில் வெளியான ஆவணப் படம் தொடர்பாக விவாதிக்க நியூயோர்க் வருமாறு சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்குப் பகிரங்க சவால் விடுத்தார்.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சவாலை ஏற்று சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் உள்ளிட்ட குழுவொன்று நேற்று முன்தினம் நியூயோர்க் சென்றது. அவர்கள் நியூயோர்க் சென்ற வேகத்திலேயே சவேந்திர சில்வாவிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
தயவுசெய்து நீங்கள் தூதரகத்துக்கு வாருங்கள். அங்கு இது தொடர்பாக பேசலாம்'' என சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டார். அழைப்பை ஏற்று அங்கு சென்ற சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன் சுமார் ஒரு மணித்தியாலம் அவர் பேசினார்.

இதன் போது, சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஆவணப் படத்தை இலங்கை எவ்வாறு வெற்றிகரமாக கையாண்டது என்பது குறித்தும் விடியோவின் உண்மைத் தன்மை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு சவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.
சவேந்திர சில்வாவின் விளக்கத்தைத் தொடர்ந்து அவர்கள் இலங்கை வருவதற்கு சந்தர்ப்பம் கிட்டுமா என சவேந்திர சில்வாவிடம் கேட்டனர்.
அதேவேளை, இந்தச் சந்திப்பு குறித்து உள்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு சவேந்திர சில்வா கருத்துத் தெரிவித்த போது கூறியவை வருமாறு:
இலங்கை அரசுக்கும், இராணுவத்தினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத் தெளிவு.
புலிகள் தோற்கடிக்கப்பட்டதையடுத்து புலி ஆதரவாளர்களும், இலங்கைக்கு எதிரான அமைப்புகளும் இவ்வாறான நிறுவனங்களை விலைக்கு வாங்கி இலங்கைக்கு எதிராகச் சதி முயற்சிகளை கட்டவிழ்த்து விடுகின்றன.
சனல் 4 தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகள் என்னை தொடர்ந்தும் அவதானித்த வண்ணமுள்ளனர். நான் எங்கு சென்றாலும் என்னை தொடர்கின்றனர். புகைப்படம் எடுக்கின்றனர் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten