[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 09:35.30 AM GMT ]
யாழ்.சாவற்கட்டுப் பிரதேசத்தில் இராணுவத்தினரின் வழமைக்கு மாறான சில நடவடிக்கைகளினால் பிரதேசத்தில் நேற்று முழுவதும் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவித்துள்ள பிரதேச மக்கள் சாவற்கட்டுச் சந்தைக்கருகிலுள்ள பனைவளவினுள் இராணுவத்தினர் சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு நின்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துப் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு குறித்த பிரதேசத்திற்க்கு வந்த படையினர் சுமார் 7மணிதொடக்கம் மக்கள் யாரும் வீதிகளில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தினர், எனினும் மக்கள் தொடர்ந்து நின்று தமது கடமைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 7.45 மணியளவில் குறித்த பிரதேசத்திற்கு வந்த நான்கு பேர் கொண்ட வேறொரு படைப்பிரிவு கிராமத்திற்குள் வந்ததும் இரண்டாகப் பிரிந்துவிட்டது.
இதன் பின்னர் சாவற்கட்டு பிரதேச சந்தைக்கருகிலுள்ள பனைவளவொன்றினுள் கிராமத்தவர் சிலர் கள்ளுக்குடிப்பதற்க்காகச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்குள்ள பற்றைக்கருகில் இரண்டு இராணுவத்தினர் தமது சீருடையின் மேலங்கியைக் கழற்றி வைத்து விட்டு நின்றிருக்கின்றனர்.
இதனை அவதானித்த கிராமத்தவர்கள் யார் என விசாரித்துக் கொண்டு அவர்கருக்கருகில் சென்றபோது தமது சீருடையை எடுத்து அணிந்திருக்கின்றனர். மேலும் அவர்களுடைய கைகளில் ஆயுதங்களும் இருந்திருக்கின்றது.
இதனால் கிராமத்தவர்கள் பின்வாங்கி விட்டனர்.
பின்னர் இரவு 8மணியளவில் மீண்டு வந்த படையினர் மக்களை கட்டாயப்படுத்தி வீடுகளிற்குள் அனுப்பியதோடு வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனால் சந்தேகமடைந்த பிரதேச மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர். எனினும் எந்த விதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Geen opmerkingen:
Een reactie posten