இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் தெளிவான செய்தி ஒன்றைக் கொடுப்பதற்கு தமிழ்க் கட்சிகளுக்குக் கிடைத்த மற்றொரு அரிய சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது.
இந்திய அரசின் மறைமுக ஆதரவுடன் புதுடில்லியில் இவ்வார முற்பகுதியில் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் தமக்கிடையிலான முரண்பாடுகள் காரணமாகவும், இந்திய அரசைத் திருப்திப்படுத்துவதற்கு முற்பட்டமையினாலும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்குத் தவறிவிட்டன.
இலங்கையின் இனப் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் இரு சபைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஒன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையிலேயே செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் தமிழ்க் கட்சிகளின் கூட்டம் புதுடில்லியில் இடம்பெற்றது.
காங்கிரஸ் எம்.பி.யும், சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமானவருமான சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருமித்து உறுதியான ஒரு தீர்மானத்தை எடுக்கத்தவறிவிட்டன.
இவ்வாறு உறுதியான நிலைப்பாடு ஒன்றை தமிழ்க் கட்சிகள் எடுத்திருந்தால் இந்தியப் பாராளுமன்ற விவாதத்தில் அது குறிப்பிடத்தக்க தாக்கம் ஒன்றை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.
திம்புப் பேச்சுக்களின் போது தமிழ்த் தரப்பினர் ஒன்றிணைந்து முன்வைத்த கோரிக்கை 'திம்புக் கோட்பாடுகள்" என்று இன்று வரையில் எவ்வாறு பேசப்படுகின்றதோ அதற்கு நிகராகப் பேசப்படும் அளவுக்கு புதுடில்லித் தீர்மானங்கள் வலுவானதாக இருந்திருக்கும்.
இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அடிப்படையாகவும், சர்வதேச அழுத்தங்களை அதிகரிப்பதற்கான ஒரு காரணியாகவும் இது விளங்கியிருக்கும். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக டில்லி சென்றிருந்த தமிழ்க் கட்சிகள் தமக்குக் கிடைத்த மற்றொரு நல்ல சந்தர்ப்பத்தை கோட்டைவிட்டுவிட்டன.
இலங்கைத் தமிழ்க் கட்சிகளுக்காக 'துயரும் வாழ்வும்" என்ற இந்த மாநாட்டை இந்திய அரசாங்கம் நேரடியாக ஏற்பாடு செய்யாத போதிலும் கூட, இந்தியாவின் சில தேவைகளின் அடிப்படையில் டில்லியின் ஆதரவுடனேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காங்கிரஸ் எம்.பி. சுதர்சன நாச்சியப்பன், ஈ.என்.டி.எல்.எப். தலைவர் பரந்தன் ராஜன் ஆகியோர் இதன் முக்கிய ஏற்பாட்டாளர்களாக இருந்துள்ளார்கள். அவுஸ்திரேலியா, மெல்பேர்னில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழரான செல்லையா நாகராஜா இந்த மாநாட்டுக்கான நெறிப்படுத்துனராக கலந்துகொண்டிருந்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி. அமைப்பத் தவிர்ந்த ஒன்பது தமிழ்க் கட்சிகளும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.பி.ஆர்.எல்.எப்.(வரதர் அணி), ரெலோ, புளொட், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மற்றும் ஈ.என்.டி.எல்.எப். ஆகிய அமைப்புக்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இதில் பங்குகொள்ளவில்லை. டில்லிக்குச் செல்வதை கொழும்பு எவ்வாறு பார்க்கும் என்ற சந்தேகத்திலும், அங்கு மேற்கொள்ளப்படும் தீர்மானம் அரசுடனான தமது உறவுகளுக்கு பாதகமாக அமையலாம் என்ற அச்சத்தினாலுமே அவர்கள் டில்லி செல்வதைத் தவிர்த்துக் கொண்டதாக தமிழ் வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
முதல் நாள் இடம்பெற்ற மாநாட்டில் பொதுவான விடயங்கள் பல தொடர்பாகவும் ஆராயப்பட்டன. குறிப்பாக தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்ற இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இந்த மாநாட்டில் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தின.
இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளையும் சார்ந்த சுமார் 20 எம்.பி.க்களும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் நிலை தொடர்பாக எடுத்துக் கூறிய தமிழ்க் கட்சிகள், இராணுவ நெருக்குவாரங்கள் சிங்களக் குடியேற்றங்கள் என்பன தொடர்பாகவும் விளக்கியிருந்தார்கள்.
இலங்கையில் காணப்படும் உண்மை நிலை தொடர்பாக இந்தியத் தரப்பினர் அறிந்துகொள்வதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் நன்கு பயன்படுத்திக்கொண்டார்கள் என்பது உண்மை.
இரண்டாம் நாள் கூட்டம்தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஈழத் தமிழர்களுடைய பிரச்சினை தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் ஒருமித்த கருத்து அவசியம் எனவும், அவ்வாறு ஒன்றை வைத்துக்கொண்டுதான் அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் சுதர்சன நாச்சியப்பன் தன்னுடைய ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.
அன்றாடப் பிரச்சினைகள், அரசியல் தீர்வு என்பவற்றை உள்ளடக்கியதாக அறிக்கை ஒன்றை தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து தயாரித்துத் தரவேண்டும் எனவும், அதனைத்தான் பாராளுமன்ற விவாதத்துக்கு கொண்டுசெல்லப்போவதாகவும் தெரிவித்த நாச்சியப்பன் தமிழ்க் கட்சிகள் தமக்குள் கலந்துரையாடி இந்த அறிக்கையைத் தயாரிப்பதற்கு அனுமதித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இறுதி அறிக்கை தயாரானதும் அதனைப் பெற்றுக்கொள்ள தான் வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் போர்க் குற்ற விசாரணை, இராணுவத்தை வெளியேற்றுவது போன்ற விடயங்களுக்கு தமிழ்க் கட்சிகள் இணக்கம் தெரிவித்தன. இது தொடர்பான அறிக்கை முதல்நாள் தயாரிக்கப்பட்டது.
அரசியல் தீர்வு தொடர்பாக இரண்டாம் நாள் அமர்வில் தமிழ்க் கட்சிகள் ஆராய்ந்தன. இதில் கட்சிகளிடையே காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டது.
இந்த அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் கலந்துகொண்ட சுமந்திரன், மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கை தயாரித்து முடிந்த நிலையில் திடீரென மாநாட்டு மண்டபத்துக்கு வந்த சுதர்சன நாச்சியப்பன், அரசியல் தீர்வு தொடர்பான இணக்கப்பாடு ஏற்பட்டுவிட்டதா எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பான விவாதம் ராஜ்ய சபாவில் இடம்பெறவிருப்பதால் இவ்வாறான அறிக்கை ஒன்று தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அப்போது தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் கருத்தொருமைப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை அவரிடம் காட்டப்பட்டது. அதனைப் படித்த அவர், அதில் மூன்றாவது பந்தியை மாற்றுமாறு கேட்டுக்கொண்டதையடுத்தே பிரச்சினை உருவாகியது.
மூன்று பந்திகளைக் கொண்ட இந்த அறிக்கையில் மூன்றாவது பந்திதான் முக்கியமானது. தேசியம் தொடர்பாகவும், சுயநிர்ணய உரிமை தொடர்பாகவும் இந்த மூன்றாவது பந்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்றாவது பந்தியில் கூறப்பட்டிருப்பதன் தமிழாக்கம் இதுதான்:
'இலங்கைத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தனியொரு இனமான தமது இருப்பையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும், அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும் அங்கீகரிப்பது இன்றியமையாததென்று என்பது எங்கள் வலுவான கருத்தாகும்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டுமே இலங்கை அரசுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமுள்ளதாக அமையமுடியும். ஆதலால் தமிழ்த் தேசம் முன்வைக்கும் இந்த உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறும் ஒரே நாட்டினுள் எட்டத்தக்க எந்தவொரு தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக அமையும் என இடித்துரைக்குமாறும் நாங்கள் இந்திய நாட்டிடமும் அனைத்துலக சமூகத்திடமும் விண்ணப்பம் செய்கின்றோம்."
இந்தப் பகுதியைத்தான் அகற்றுமாறு சுதர்சன நாச்சியப்பன் கேட்டுக்கொண்டார். இலங்கைத் தமிழர்களுக்கான கோரிக்கையை முன்வையுங்கள் எனக்கூறிய அவர் பின்னர், இலங்கையைத் திருப்திப்படுத்த இந்தியாவுக்கு ஏற்புடையதான கோரிக்கையை முன்வையுங்கள் என்ற நிலைக்கு இறங்கிவந்திருப்பதாகவே இது அமைந்திருந்தது.
டில்லி மாநாட்டில் பங்குகொண்ட கட்சிகள் சிலவற்றுக்கு இந்தியாவைச் சமாதானப்படுத்த வேண்டிய தேவை இருந்ததால் நாச்சியப்பனின் கோரிக்கைக்கு அவை இணங்கின.
இதற்குப் பின்னர்தான் இந்த மூன்றாவது பந்தியை மாற்ற வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கேட்டுக்கொண்டார். குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்ற பதத்தை அறிக்கையிலிருந்து நீக்க வேண்டும் என ஆனந்தசங்கரி வலியுறுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரைவிட புளொட், ஈ.என்.டி.எல்.எப். மற்றும் ஈ.பி.ஆர்.எல்.(வரதர் அணி) என்பனவும் இந்த நிலைப்பாட்டை ஆதரித்தன. அதாவது சுயநிர்ணய உரிமை என்ற சொல் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுடைய நிலைப்பாடாகவும் இருந்தது. அதன் அடிப்படையில் தனியான அறிக்கை ஒன்றை அவை தயாரித்து முன்வைத்தன.
இந்த நிலையில் மாநாட்டு மண்டபத்தில் தமிழ்க் கட்சிகளின் சார்பில் இரண்டு அறிக்கைகள் தயாராக இருந்தன. அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு தமிழ்க் காங்கிரஸ் மட்டுமே ஆதரவு தெரிவித்தது.
இரண்டாவது அறிக்கைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.என்.டி.எல்.எப். மற்றும் ஈ.பி.ஆர்.எல்.(வரதர் அணி) என்பன ஆதரவளித்தன. தமிழ்க் காங்கிரஸ் அதனை எதிர்த்தது.
அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப்., மற்றும் ரெலோ என்பன இப்பிரச்சினையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. அவை நடுநிலை வகித்தன. இந்த நிலையில்தான் பொதுவான அறிக்கை ஒன்றை வெளியிட முடியாத துர்ப்பாக்கிய நிலை தமிழ்க் கட்சிகளுக்கு ஏற்பட்டது.
தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் மட்டும்தான் சுயநிர்ணய உரிமை என்ற சொல் அகற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
இது தொடர்பாக கஜேந்திரகுமாரிடம் கேட்டபோது, 'இந்த வார்த்தைப் பிரயோகங்கள் முக்கியமானவை. திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்களில் அந்த வார்த்தைகளுக்கு அதிகளவு அர்த்தம் இருந்தது.
அப்போதுதான் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு கோரிக்கையை முன்வைத்தன. இப்போது திம்புவின் அடுத்த கட்டமாக புதுடில்லிப் பேச்சுக்கள் அமைந்திருக்கின்றது. திம்புக் கோட்பாடுகள் இலங்கையை நோக்கி முன்வைக்கப்பட்டவை.
இப்போது இலங்கை அரசுடன் பேசி அவர்கள் எதனையும் செய்யப்போவதில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியிருக்கும் நிலையில், இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் நோக்கியதாக புதுடில்லி அறிக்கை வர வேண்டும் என்பதற்காகவாவது சுயநிர்ணய உரிமை என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்தினேன்" எனக் குறிப்பிடும் கஜேந்திரகுமார் மற்றொரு விடயத்தையும் குறிப்பிடுகின்றார். 'இந்த விடயத்தில் த.தே.கூ. உறுதியாக இருந்திருக்குமாயின் ஆனந்தசங்கரி தனது கோரிக்கையைக் கைவிட்டிருப்பார்."
இந்தக் கட்டத்தில்தான் பொதுவான அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கான முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்தே அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் அறிக்கையாக பின்னர் வெளியிடப்பட்டது.
'தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தால், அதற்கு திம்புத் தீர்மானத்துக்கு இணையான முக்கியத்துவம் ஒன்று கிடைத்திருக்கும்.
அந்த அடிப்படையில்தான் நான் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தேன்" எனவும் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், 'எந்த ஒரு தீர்வுக்கு தாம் தயாராக இல்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவித்திருக்கும் நிலையில் புதுடில்லியில் தமிழ்க் கட்சிகள் இணக்கப்பாடு ஒன்றை வெளிப்படுத்தியிருந்தால் அதற்கு மிகவும் பெறுமதி இருந்திருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இவ்வாறான ஒரு இணக்கப்பாட்டை எட்டமுடியாமல் போனமை மிகவும் துரதிஷ்டமானது" எனவும் குறிப்பிட்டார்.
புதன்கிழமை மாலை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருந்தது.
தமிழ்க் கட்சிகள் உறுதியான அறிக்கை ஒன்றை அவரிடம் சமர்ப்பித்திருந்தால், மறுநாள் வியாழக்கிழமை பாராளுமன்றத்திலும் அது எதிரொலித்திருக்கும். ஆனால், தமிழ்க் கட்சிகளால் பொதுவான அறிக்கை ஒன்றைத் தயாரிக்க முடியாது போனமையால் அமைச்சர் கிருஷ்ணாவுடனான சந்திப்பும் ரத்துச்செய்யப்பட்டது.
இந்திய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை விவாதிக்கப்பட இருந்த நிலையில் டில்லியிருந்த தமிழ்க் கட்சிகள் மிகவும் பெறுமதியான ஒரு பங்களிப்பைச் செய்திருக்க முடியும்.
அதனை அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் துரதிஷ்டவசமானது. இவ்வாறான மற்றொரு சந்தர்ப்பம் இப்போதைக்கக் கிடைக்கப்போவதுமில்லை!

Geen opmerkingen:
Een reactie posten