தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 augustus 2011

சென்னையில் சிங்களவர் மீது தாக்குதல்: ரீ சேட் எரிக்கப்பட்டது !

03 August, 2011
சுமார் 50 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் இன்று சென்னையில் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுடன் நடமாடியுள்ளனர். சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் வரை இவர்கள் நடந்துசென்றது பல தமிழர்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் இவர்கள் சென்ட்ரல் பகுதியில் உள்ள ஏ.ஜி.பி விடுதியில் நுழைந்துள்ளனர். இவர்கள் அங்கு தங்கியிருப்பதாக தமிழ் உணர்வாளர்களுக்கு செய்தி கிடைத்ததை அடுத்து, அவர்கள் அவ்விடுதிக்குச் சென்று உண்மையில் சிங்களவர்கள் அங்கு தங்கியுள்ளனரா என விசாரித்துக்கொண்டு இருந்தவேளை 10 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் அவ்விடத்தில் இருந்த கார் ஒன்றில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். இருப்பினும் மாடிப் படியில் இருந்து மேலும் 3 சிங்களவர்கள் இலங்கை தேசிய கொடி பொறிக்கப்பட்ட ரீ சேட்டுகளோடு வந்து தமிழ் உணர்வாளர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டனர். தமிழனை அழித்துவிட்டு சிங்கக் கொடியோடு தமிழ் நாட்டில் என்ன துணிவில் நீங்கள் நடமாடுகிறீர்கள் எனக் கேட்டு தமிழ் உணர்வாளர் அவர்களை நையப்புடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாது அவர்களின் ரீ சேட்டுகளைக் களற்றி சிகரெட் லைட்டர்கொண்டு எரித்துள்ளனர். சிங்கக் கொடி பொறிக்கப்பட்ட அந்த ரீ சேட்டுகளை அவர்கள் எரித்ததைப் பார்த்த சிங்களவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளனர். இச் சிங்களவர்களுக்கு அப்பகுதியில் உள்ள எந்த ஒரு விடுதியும் தங்க அனுமதி கொடுக்கக்கூடாது என தமிழ் உணர்வாளர்கள் எச்சரித்து அவ்விடத்தில் இருந்து அகன்றனர் என சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் தற்போது ஈழத் தமிழர்களுக்கான குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டு மீனவர்களை கொடூரமாகக் கொலைசெய்யும் இலங்கை இராணுவத்தின் மீது தமிழக மக்கள் பெரும் கோபத்துடன் இருப்பதும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது எனலாம்.

Geen opmerkingen:

Een reactie posten