பலத்த சண்டையின் பின்னர் இன்று காலை புரட்சிப்போராளிகள் மும்மார் கடாபியின் வளாகத்தினுன் பிரவேசித்தனர் என்றும் அதிபர் கடாபி தந்திரோபயமான முறையில் பின்வாங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறுமாத கால கிளர்ச்சியின் பின்னர் புரட்சிப்போராளிகள் கடாபியின் பாப-அல் அஸிஸியாவின் வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தனர் என்றும் பிபிசி தெரிவித்தது
இன்று காலை ஆரம்பமான பாரிய தாக்குதலை தொடர்ந்து வளாகத்தின் வெளிச்சுவர்களை உடைத்துக் கொண்டு புரட்சிப்போராளிகள் நுழையும்போது வானில் நேட்டேவின் ஜெட் விமானங்கள் சுற்றிக்கொண்டிருந்தன
அந்த வளாகத்தினுள் கடாபியோ அல்லது அவரின் உறவினர்களோ இருந்தார்களா என்பது தெரியவில்லை.
வளாகம் புரட்சிவாதிகளிடம் வீழ்;ச்சியடைந்ததை அடுத்து ஓடியோ சாதனம் மூலம் கடாபி தாம் வாபஸ் வாங்கியுள்ளதாகவும் நேட்டோவிற்கு எதிராக வெற்றி நோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.
வளாகத்தினுள் பிரவேசித்த புரட்சிப் போராளிகள் கடாபிக்கு ஆதரவான படைகள் வெளியேறிவிட்டதைக் கண்டனர்.
கடாபியின் 42 ஆண்டு கால சர்வாதிகாரஆட்சி முடீவுக்கு வந்ததை அறிவிக்குமுகமாக புரட்சிவாதிகள் தங்களின் கொடிகளை ஏற்றினர். கடாபியின் ஆட்சியை பிரதிபலிக்கும் சின்னங்கள் மற்றும் அடையாளங்களை அழித்து விடுவதில் புரட்சிவாதிகள் ஈடுபட்டிருந்தனர். தங்கத்திலான கடாபின் தலைச்சின்னம் நொருக்கப்பட்டது.
புரட்சிவாதிகளின் திரிபோலி தளபதி அப்துல் ஹாகிம் பெல்ஹாஜ் ‘ நாம் சண்டையில் வென்று விட்டோம். சண்டை முடிந்து விட்டது’ என்று வளாகத்தினுள் இருந்து அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார் |
Geen opmerkingen:
Een reactie posten