தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 19 augustus 2011

பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளாரா?

 
11 August, 2011 by admin
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் இலங்கையில் இருந்து வெளியேறி மேற்குலக நாடொன்றிற்கு சென்றுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அண்மையில் பேராசிரியர் வெளியிட்ட அறிக்கையொன்றின் மூலம் அவதூறு ஏற்பட்டுள்ளதாக கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்ட நடவடிக்கை எடுத்த பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ் தீவக பகுதிகளில் மோசடிகள் இடம்பெற்றதாக பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாக ஊர்காவற்துறை காவற்துறையினர் பேராசிரியரிடம் விசாரணை நடத்தியதாக ஜூலை மாதம் 29 ஆம் திகதி ஈபிடிபியின் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது, அதனை அவர் மறுத்திருந்தார்.

இதன் பின்னர் காவற்துறையினர் பேராசிரியரிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், கடந்த 5 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பாணை அனுப்பபட்டிருந்தது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான வழக்கில் பேராசிரியர் சார்பாக ஆஜராக சட்டத்தரணிகள் எவரும் முன்வராத நிலையிலும் , பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட சூழ்நிலையிலும், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் பேராசிரியர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten