தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 augustus 2011

குடத்தனை, கற்கோவளப் பகுதியிலும் மர்ம மனிதர்களின் அடாவடித்தனம்!- மக்கள் பதற்றம்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:26.22 PM GMT ]
சமீம காலமாக மக்களை பீதியில் உறைய வைத்திருக்கும் மர்ம மனிதன், கிறீஸ் மனிதனின் அடாவடித்தனம் வடமராட்சி கிழக்கு, குடத்தனைப் பகுதியிலும் ஆரம்பித்துள்ளது.
மர்ம மனிதர் நால்வர், இன்று மாலை 7 மணியளவில் நடுக்குடத்தனைப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் புகுந்தவேளை அவ்வீட்டிலுள்ளோர் கத்திக் கூச்சலிட்டு அயலவர்களை அழைத்ததும் ஓடியுள்ளனர்.
ஊர் மக்கள் கூடி அந் நால்வரையும் துரத்தியமையால் அப்பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த சவுக்கு காட்டிற்குள் நால்வரும் ஓடி மறைந்துள்ளனர். சவுக்கங்காட்டிற்குள் ஓடிய மர்ம மனிதர்களை சிலமணிநேரம் தேடியும் ஊர்மக்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தம் முகங்களை கறுப்புத்துணியினால் மறைத்து கண் மட்டும் தெரியும்படியாக வந்த அம்மர்ம மனிதர்கள் புகுந்த வீட்டில் வயதுக்கு வந்த இரு பெண்பிள்ளைகள் அடங்கிய குடும்பமே வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
மேற்படிச் சம்பவத்தினால், பீதியடைந்துள்ள அப்பகுதி மக்கள், மாலை வந்த மர்ம மனிதர்கள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தினால் சிறு குழந்தைகள், வயது முதிந்தவர்கள், சுகவீனமுற்றோர், வயது வந்த பெண்பிள்ளைகள் என எதுவித வேறுபாடியுமின்றி எல்லோரும் கூடி அங்கு அமைந்துள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயத்தில் இரவு தஞ்சம் புகுந்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அறிவித்தும் அப்பகுதி மக்களுக்கு இதுவரையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
ஒரு சில தினங்களுக்கு முன் குடத்தனைப் பகுதி குடியிருப்பு மக்களை அழைத்து சிறு கூட்டத்தினை நடாத்திய சிங்கள இராணுவத்தினர், மர்ம மனிதனோ, கிறீஸ் மனிதனோ, இனந்தெரியாத நபர் யாராயினும் உங்கள் பகுதிக்கு வந்தால் அவர்களைப் பிடித்து பொலிஸ் நிலையத்திலோ, இராணுவத்திடமோ ஒப்படைக்குமாறு தெரிவித்திருந்தனர்.
எனவே, குடத்தனைப் பகுதியில் இராணுவம் கூட்டம் நடாத்திய சில நாட்களுகுள் மர்ம மனிதன் நமது பகுதிக்கு வந்ததனால், இங்கும் மர்ம மனிதன் வருவான் என்பது ஏற்கனவே இராணுவத்தினருக்கு தெரிந்திருக்கின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நால்வரும் சற்றுமுன்னர் கற்கோவளப் பகுதியில் புனிதநகரில் அமைந்துள்ள வீடொன்றினுள் புகுந்ததும், வீட்டிலிருந்த சிறுவன் ஒருவன் "மாயாவி.... மாயாவி..." என சத்தமிட்டதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றுகூடியதை அடுத்து அந்நால்வரும் மீண்டும் ஓடி மறைந்துள்ளனர்.
இவ்வாறு மக்கள் முன் தோன்றி மக்களைப் பதற்றமடைய வைத்துவிட்டு மர்மமாக மறைந்து ஓடிச் செல்லும் இம் மர்ம மனிதர்களால்,  மக்கள் பீதியடைந்து இரவு வேளை என்பதையும் பொருட்படுத்தாது பயத்தினால் மக்களோடு மக்கள் ஒன்றுகூடி நடுவீதியில் இருக்கின்றனர் என தற்போது தெரியவந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten