தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 augustus 2011

சங்கிலிய மன்னன் சிலையில் உள்ள வாளின் மர்மம் என்ன என்று தெரியுமா உங்களுக்கு?

 இணைய தளங்கள் பொய்யான தகவல்களை போட்டு மக்களை உசுப்பேற்றுவதும் தங்கள் பொய்கள் மக்களுக்கு தெரியவந்ததும் சிறிதும் சலிப்போ வெட்கமோ இன்றி வேறொரு பொய்யை அவிழ்த்துவிடுவதும் இப்போ வழமையாகிவிட்டது.இதில் தமிழ்வின் ,அதிர்வு முன்னணியில் உள்ளன.கீழே  உள்ள செய்திஅதிர்வின் அசட்ட்டுத்தனத்துக்கு ஒரு 
மைல்க்கல் !! 

04 August, 2011

சங்கிலிய மன்னன் சிலையை உடைத்து அவ்விடத்தில் இருந்து அகற்றப்போகிறார்கள் என முதலில் தகவல்கள் வந்தது. அதனை எல்லாத் தமிழ் இணையங்களும் செய்தியாகப் போட்டது. புலம்பெயர் தமிழ் மக்களும் தமிழக உறவுகளும் கொதித்துப்போனார்கள். இதனால் நாம் அதனை அகற்றவில்லை புணரமைக்கிறோம் என்றார்கள். பின்னர் அச் சிலையில் உள்ள வாளை அகற்றி சங்கிலிய மன்னனின் சிலை மீள் வைக்கப்படவிருப்பதாக மீண்டும் ஒரு செய்தி வந்தது. பின்னர் பார்த்தால் வாளுடன் கூடிய பொன்நிறத்தினாலான சங்கிலியமன்னன் சிலை திறக்கப்பட்டது. ஆனால் அச் சிலையை திறப்பதற்கு முன்னர் அதனைப் பார்த்தால் அச் சிலையில் வாள் இல்லை. பின்னர் எடுக்கப்பட்ட படத்திலேயே வாள் இருக்கிறது. அப்படி என்றால் தற்போது சங்கிலிய மன்னனின் கைகளில் உள்ள வாளை தேவைக்கேற்ப களற்றிவைக்க முடியும், பின்னர் தேவை என்றால் எடுத்து மாட்டவும் முடியும். முன்னர் இருந்த சங்கிலிய மன்னன் சிலையில் வாள் கைகளோடு பொருத்தப்பட்டு இருந்தால் அதனை தனியாக அகற்ற முடியாத நிலை இருந்தது என்கிறார்கள் சிலர்.



இது ஒருபுறமிருக்க முன்பிருந்த சங்கிலிய மன்னன் சிலையை நோக்கினால் தனது வலது கையில் வாளினை தூக்கிப் பிடித்தபடி கம்பீரமாக குதிரையில் பாய்ந்து செல்வது போன்று அந்த சிலை வடிவமைக்கப் பட்டிருந்தது. தமிழர்களின் வீரத்தை தெள்ளத் தெளிவாக அச் சிலை சித்தரித்தது. புணரமைபதாக கூறி தற்போது வைக்கப்பட்டுள்ள சிலையை நோக்கினால் அக் கம்பீர தோற்றம் அற்ற வகையில் வாளை நேராக ஏந்தியவாறு அமைக்கபட்டிருப்பதாகவும் இது போர் வீரனுக்குரிய தோற்றம் இல்லையெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீர மன்னர் சங்கிலியனின் சிலையை அவரை சரண் அடையும் கோலத்தில் சிங்கள அரசு சிலையாக்கி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழக ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர் .

ஆக மொத்தத்தில் தற்போது சங்கிலியன் சிலையை புணரமைக்கிறோம் என்று சொல்லி, வாளைக் களற்றிப் போடக்கூடிய விதத்திலும் மன்னனின் கம்பீர தோற்றத்தை சிதைத்தும் அதனை திரும்பச் செய்துள்ளார்கள். இது தான் இவர்கள் செய்துள்ள புணரமைப்பாகும். நாளை இலங்கை இராணுவம் இந்த வாளை களற்றி எறிந்துவிட்டு, யாரோ கள்வர் அதனைக் களவாடி விட்டனர் என்றால் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். இல்லை முதலில் சொன்னது போல தென்னிலங்கையில் இருந்துவரும் சிங்களவர்களுக்கு சங்கிலியன் வாளுடன் நிற்பது பிடிக்கவில்லை என்றால், அரசியல் பிரமுகர்கள் யாழ் வரும்வேளை இனி சங்கிலியன் சிலையில் உள்ள வாளைக் களற்றி விடலாம். என்ன ஒரு திட்டம் ... இதற்கு யாழ் அரச அதிபர் ஆளுனர் டக்ளஸ் எல்லாம் ரூம் போட்டு யோசித்திருப்பார்களோ தெரியவில்லை.

மொத்தத்தில் தமிழர் தலையில் முழகாய் அரைப்பது என்று இலங்கை அரசோடு டக்ளஸ் மாமாவும் சேர்ந்து நின்று ஆட்டம் போடுகிறார். கேட்க ஆள் இல்லை என்றால் இப்படித்தான்.





Geen opmerkingen:

Een reactie posten