தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 augustus 2011

பயங்கரவாதச் சட்டத்தையும் அரசு உடன் நீக்க வேண்டும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 08:01.31 AM GMT ]
அவசரகாலச் சட்டத்திலுள்ள விதிமுறைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திலும் உள்ளன. எனவே, அவசரகாலச் சட்டத்தை நீக்கியதால் மட்டும் எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் இடம்பெற்றுள்ளன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டம் இனி நீடிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் அறிவித்தார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதான எதிர்க்கட்சிகள் அவசரகாலச் சட்டத்தை நீக்கியது போன்று அரசு பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி சட்டத்தரணியான சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்தவை வருமாறு:
அவசரகாலச் சட்டத்தில் உள்ள விதிமுறைகள் பயங்கரவாத தடைச்சட்டத்திலும் உள்ளன. எனவே, அவசரகாலச் சட்டத்தை மாத்திரம் நீக்கியுள்ளதால், எவ்வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதே நிலைதான்.
அவசரகாலச் சட்டத்தை நீடிக்க முடியாத ஓர் சந்தர்ப்பத்தில் அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்திய சம்பவம் இங்கு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பயங்கரவாத தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும்.
அதேவேளை, அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும். என்றார்.
இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில், 'அவசரகால விளைவு விதிகள் சட்டம்' என்ற புதிய சட்டமொன்றை அரசாங்கம் விலைவில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten