லிபிய ஜனாதிபதி கடாபியின் வாசஸ்தலத்தில் போராளிகளால் கைப்பற்றப்பட்டுள்ள அவரது உடைமைகளில் அமெரிக்க முன்னாள் இராஜாங்க செயலாளர் கொண்டலிசா ரைஸின் புகைப்படங்கள் அடங்கிய அல்பம் ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
தற்போது இவ் அல்பம் தொடர்பில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியவண்ணம் உள்ளன.
அதிலொன்றுதான் கடாபி கொண்டொலிசா ரைஸின் மீது பல வருடங்களாக ஈர்ப்புக் கொண்டிருந்தமை தொடர்பிலான தகவலாகும்.
கடாபி பல தடவைகள் கொண்டலிஸா ரைஸ் தொடர்பில் ஊடகங்களில் வர்ணித்திருந்ததுடன் பாராட்டியுமிருந்தார்..
குறிப்பாக 2007 ஆம் ஆண்டு அல் ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அவர் வழங்கியிருந்த பேட்டியின் போது " லீசா...லீசா...லீசா... நான் அவரை விரும்புகிறேன், எனது டார்லிங் கறுப்பின ஆபிரிக்க பெண் அவர்" எனவும் கடாபி தெரிவித்திருந்தார்.
மேலும் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த கொண்டலிஸா ரைஸ் அரேபியத் தலைவர்களுக்கு உத்தரவு வழங்குவதனைப் பார்த்துப் பெருமைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொண்டலிஸா ரைஸ் 2008 ஆம் ஆண்டு லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவர் கடாபியுடன் தனியான விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கடாபி ரைஸிற்கு வைர மோதிரம் உட்பட சுமார் 212,000 அமெ.டொலர் பெறுமதியான பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.
இத்தகவல்களானவை தற்போது ஊடகங்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகின்ற விடயமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
Geen opmerkingen:
Een reactie posten