24 August, 2011
கடாபி இன்னும் 24 மணிநேரத்தில் பிடிபடுவார் என்கிறது மேற்குலகம். ஆனால் 2 நாட்கள் முடிந்தும் அவரை பிடிக்க முடியவும் இல்லை. அத்தோடு நேட்டோ படைகளின் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் எதிர்பாராத விதமாக பல இடங்களில் அதிர்ச்சித்தோல்வி அடைந்துள்ளனர். அங்கே நடப்பது தான் என்ன பார்ப்போமா ?
லிபிய நாட்டை 42 வருடங்களாக ஆட்சிசெய்யும் கடாபியை எதிர்த்து பென்காசி என்னும் நகரில் முதல் புரட்சி வெடித்தது. அவர்களை உடனே அங்கிகரித்த மேற்குலகம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது. பிரான்ஸ் அதற்கும் ஒரு படிமேலே போய் விமானம் மூலம் ஆயுதங்களையும் இறக்கிவிட்டது. அதனை எடுத்து கிளர்ச்சியாளர்கள் கடாபியின் படையினருக்கு எதிராகப் போராடினர். அவர்களில் சிலர் கொல்லப்பட்டபோது அமெரிக்கா பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஐ.நாவில் கூக்குரலிட்டது. உடனே பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்டி 1974ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தைப் பாவித்து மக்களைப் பாதுகாக்க லிபிய வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறக்ககூடாது, மீறினாள் நேட்டோ படைகள் தாக்கும் எனவும் அறிவித்தது. இவை அனைத்தும் சுமார் சில வாரங்களில் நடந்தது தான் அதிர்ச்சியான விடையம்.
கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களாக இருந்ததால் அவர்கள் சண்டைப் பயிற்சி அற்றவர்களாகவும் தாம் இருக்கும் பென்காசி நகரை பாதுகாக்கவும் அவர்கள் கற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் முன்னேறிச் சென்று மற்றைய நகரங்களைக் கைப்பற்றவேண்டும் என பிரான்ஸ் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் விரும்பியது. நீங்கள் சென்று தாக்குங்கள் லிபிய விமானப்படையோ இல்லை இராணுவமோ உங்களை தாக்காமல் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றது மேற்குலகம். தரை கடல், மற்றும் வான்பரப்பில் இருந்து நேட்டோ தொடுத்த பல தாக்குதல்கள் லிபியாவின் இராணுவ வலிமையை 50% தத்தால் குறைத்தது.
அதனைத் தொடர்ந்து கிளர்ச்சிப் படைகளில் பல பொதுமக்கள் தம்மை இணைக்க அவர்கள் பென்காசி நகரில் இருந்து முன்னேறி தலைநகர் திரிபோலி நோக்கிச் சென்றனர். இடையில் தோன்றும் அவ்வளவு எதிர்ப்பையும் முறியடிக்க நேட்டோ படையினர் தம்மாலான அவ்வளவு உதவிகளையும் செய்தனர். ஆனால் கிளர்ச்சியாளர்களின் படை அவ்வளவு வேகமாக முன்னேறவில்லை. இதனால் நேட்டோ படைகள் கடும் கோபத்தில் இருந்தனர். நேரடியாகா லிபியாவுக்குள் உலங்கு வானூர்தி மூலம் சென்று பிரெஞ்சுப் படைகள் அவர்களுக்கு வேண்டிய பயிற்சியைக் கொடுத்தனர். அதுவும் பெரிதாகப் பலனளிக்கவில்லை. தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில் நேட்டோ படைகள் இருந்தவேளை கடாபியின் ஆதரவுப் படையினர் திடீரென பல இடங்களில் இருந்து பின் நகர்ந்தனர்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடங்களைப் பாவித்து கிளர்ச்சியாளர்கள் படுவேகமாக முன்னேறி தலைநகர் திரிபோலிக்குள் நுளைந்தனர். இதனை அடுத்து பி.பி.சி அல்ஜசீரா சி.என்.என் என எல்லா சர்வதேச தொலைக்காட்சிகளும் கடாபி பிடிபடப் போகிறார் என்றும், கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருக்கிவிட்டனர் என்றும் கடாபியின் மாளிகையை கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டனர் என்றும் பல செய்திகளை மழைபோலப் பொழிந்து தள்ளியது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இதில் பல செய்தி லிபிய செய்தியாளர்களால் திட்டமிட்ட வகையில் சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கப்பட்டது தான். அதிலும் கடாபியின் 2 மன்களில் முதன்மையானவரை கிளர்ச்சியாளர்கள் கைதுசெய்துள்ளனர் என்று ஒரு செய்தி வந்தது.
இதனை உடனே நம்பி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான வழக்குத் தொடுனரும் கடாபி மகனைத் தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கருத்து வெளியிட்டு மூக்குடை வாங்கிக்கொண்டார். காரணம் இன்று செவ்வாய் கிழமை கடாபியின் மகன் தொலைக்காட்சியில் தோன்றினார். அவர் திரிபோலியில் இராணுவத்துடன் திரிவதும் பெருவாரியான மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் காட்டப்பட்டது. பென்காசி என்னும் நகரில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள தலைநகர் திரிபோலிக்கு கிளர்ச்சியாளர்களை முன்னேற விட்டு தற்போது அவர்களுக்கு கிடைக்கும் ஆயுத வளங்களைத் தடுத்து தலைநகர் திரிபோலிக்குள் வைத்து அனைவரையும் முடிக்கும் படு பயங்கரத் திட்டத்தை கடாபி தற்போது நிறைவேற்றி வருகிறார்.
கடாபியின் இத் திட்டத்துக்கு அவரது மகன் உறுதுணையாக இருக்கிறார். இத்தோடு மட்டும் கடாபி நின்றுவிட வில்லை அந் நாட்டில் பல இடங்களில் உள்ள எண்ணெய் கிணறுகளையும், கச்சா எண்ணையைச் கொண்டு செல்லும் பைப் லைன்களையும் குறிவைத்து பாரிய சி- 4 வெடிபொருட்களை அவர் படையினர் பொருத்தியுள்ளனராம். கடாபிக்கு ஏதாவது நடந்தால் அத்தனை கிணறுகளும் எரிந்து நாசமாகிவிடுவதோடு, லிபிய நாடு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அந் நிலைக்கு தள்ளப்படும் எனவும் கடாபி எச்சரித்துள்ளார். இதனை எல்லாம் நேட்டோ நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது கடாபியின் மாளிகை முற்றுகை என்று எல்லாம் கதைவெளியானபோது, அவருக்கு தனது நாட்டில் தஞ்சம் தரமாட்டோம் என்று தென்னாபிரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். அது கூட இப்போது கமெடியாகிவிட்டது.
பிந்திக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கடாபி பலத்தபாதுகாப்போடு இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்தும் தலைநகர் திரிபோலியில் ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குலகை ஒரு ஆட்டங்காணவைத்துள்ளார் கடாபி என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்து என்னசெய்வது என்று நேட்டோ நாடுகள் ரூம் போட்டு யோசிக்கவேண்டி உள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten