26 August, 2011
மர்மமனிதர் பற்றி சிறிலங்கா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற தமிழர் ஒருவர் புத்தளத்தில் இராணுவச் சீருடையணிந்த நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ஐதேகவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா இந்தத் தகவலை நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், பெருமாள் சிவகுமார் என்பவரே இராணுவ சீருடையணிந்தோரால் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புனித ரமழான் மாதத்தில் புத்தளத்தில் முஸ்லிம்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மர்மமனிதர்கள் பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைவில் தடைவிதிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பெரேரா, இதுகுறித்து முறையான விசாரணைகளை நடத்தி பின்னணியைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten