தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 18 augustus 2011

விழுந்தும் மீசையிலே மண்படாத புலியாதரவு அதிர்வு!!

சிதம்பரம் டக்ளசுக்கு மதுபாணம் கொடுக்க சோனியாவுடன் மகிந்தர் சேர்ந்து குடித்தார் !
17 August, 2011 by admin


இலங்கையில் இறுதிப்போர் நடந்தபோதும் சரி ஐ.நாவில் போரை நிறுத்தக்கோரி பாதுகாப்புச் சபையில் தீர்மாணம் நிறைவேற்ற முற்பட்டவேளை என்றாலும் சரி பின்னர் போர் குற்ற நடவடிக்கைகள் ஆனாலும் சரி அனைத்து விதங்களிலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறதே எப்படி என்று பல தடவைகள் தமிழர்கள் யோசித்திருப்பார்கள். எதற்கு எடுத்தாலும் இந்தியாவிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும் எனச் சில த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பறப்பதும் வழக்கம். ஆனால் இந்தப் படத்தைப் பாருங்கள். மகிந்தர் தனது மனைவி மற்றும் டக்ளஸ் என்று பல பன்றிக்குட்டிகளோடு இந்தியா சென்று வைன் அடித்து மகிழ்ந்துள்ளார்.

இதில் ஒரு ஓரமாக டக்ளசுக்கு ப.சிதம்பரம் அவர்கள் வைன் வாத்துக் கொடுக்கிறார் பின்னர் இருவரும் "சியர்ஸ்" சொல்லி தண்ணியடிக்க ஆரம்பிக்கின்றனர். இதில் இந்திய ஜனாதிபதியும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மிகவும் உயர்மட்டத்தில் நடைபெற்ற இந்த இரவுநேர களியாட்டக் கூட்டத்தில் தாராளமாக வைன் என்னும் மதுபாணம் பாய்ந்துள்ளது. குறிப்பாக டக்ளஸ் போதையில் தள்ளாடியுள்ளார். இதில் கான்சரால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா வேறு தண்ணியடிக்கிறார். கேட்டால் விருந்துபசாரம் என்று நல்ல நாகரீகமான வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்துவிடுவார்கள். இப் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், போதையில் இவர்கள் என்ன பேசீனார்கள் எதை எதைப் பற்றி எல்லாம் நக்கலடித்தார்கள் என்ற விடையங்களும் வீடியோவில் பதிவாகியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அவற்றைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.

இவை அனைத்தும் வெளியே வந்தால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாகாணங்களில் காங்கிரஸ் அரசு மன் கவ்வும் என்பது நிச்சயம். இப்போது தெரியவேண்டும் இந்திய மத்திய அரசுக்கும் மகிந்தருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று. யாராவது கேட்டால் இலங்கை சீனா பக்கம் செல்லாது இருக்க நாங்கள் இப்படி அடிக்கடி பார்ட்டி கொடுக்கவேண்டி இருக்கும் என்று இந்திய மத்திய அரசு சொன்னாலும் சொல்லும். இலங்கை அதிபரோடு மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர் கொண்டுள்ள உறவுக்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என நாம் நினைக்கிறோம்.


Your Comments



கொன்று குவித்தபின் கூடிக் கும்மாளமடித்து........

இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதா...? அல்லது உள்ளூர் சரக்கா ? என்று சிதம்பரமும் டக்ளசும் ஆராய்வது போலுள்ளது.

'இதுதான் மச்சான் கடைசியா நீ எங்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கும் நாள். அடுத்தமுறை நீ இந்தியாவுக்குள் வருவது, சரிவருமாவென்று தெரியவில்லை. உன்னுடைய சூளைமேட்டு வெடி விளையாட்டை, இன்னமும் தமிழ்நாட்டு உணர்வாளர்கள் நோண்டிக்கொண்டு இருக்கிறார்கள். அங்க இருக்கிற நீதிபதி ஒருவரும், உன்னை எப்படி நாட்டுக்குள்ள விட்டதென்று வறுத்தெடுக்கிறார்'... என்று சிதம்பரத்தார் சொல்வதை அவதானமாகக் கேட்பதுபோல் தலை ஆட்டுகிறது டக்கு.

மற்ற பொம்பிளைகள் அடிக்க ஆரம்பித்த பிறகு, அடிப்பமென்று பார்த்துக் கொண்டிருக்கிறார் அன்னை[!] சோனியா. மற்றையோர் நாலு ரவுண்ட் அடித்து முடிக்கும் வரையில், ஒரு கிளாசையே மெதுவாக உறிஞ்சிக் கொண்டிருப்போமென தற்காப்புநிலை எடுத்து விட்டார் போலும்.

'புலிகளை அழித்து விட்டோமென்று சொல்கிறார்கள். ஆனால் இன்னமும் இறப்புச் சான்றிதழ் தராமல் இழுத்தடிப்பதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு..' என்று நினைத்தபடி முகத்தை உர்..என்று வைத்துள்ளார் 'நிழல் அதிபர்' சோனியா.

முக்காடு போட்டபடி முதுகைக் காட்டிக் கொண்டிருக்கும் அம்மணியை எங்கேயோ கண்டதுபோலிருக்கிறதே. ஆகா.... நம்ம ரப்பர் ஸ்டாம்ப் அதிபர் தான். அங்கு வருமுன், இன்று காந்திஜெயந்தி தினமா [தண்ணிக்கு விடுதலை நாள்] என்று காலண்டரையும் பார்த்திருப்பார். வழக்கமாக வெள்ளைச் சட்டையோடு வரும் மகிந்தர், இன்று சில்க்கு ஜிப்பாவோடு வந்திருக்கிறார்.
ஆனால் அந்த சிவப்புத் துண்டை மட்டும் மாற்றவில்லை. சிங்கிற்கும் சோனியாவிற்கும், மகிந்தரின் கழுத்தில் தொங்கும் சிவப்புச் சால்வையின் அர்த்தம் விளங்கும். மகிந்தரின் நிரந்த நண்பன் 'சிவப்புக் கொடி சீனாதான்' என்பதை சூசகமாகச் சொல்லும் சால்வை அது. பேர்சி மகேந்திர மகிந்த ராஜபஷவின் கள்ளச் சிரிப்புக்குத்தான் ஒரு விளக்கம் தேவை.

'உங்கள் தலையை சுத்தி எனது காரியத்தை சாதித்துவிட்டேன். இனி என் பின்னால்தான் நீங்கள் இழுபட்டு வருவீர்கள். 'சீபா' விற்கும் 'பெப்பே' காட்டிவிட்டேன். அம்பாந்தோட்டை வேண்டுமா என்று கேட்பதுபோல் கேட்டு, சீனாவிடம் கொடுத்து விட்டேன். மன்னார் கடலில் ஒரு துண்டைக் கொடுத்து, முதலில் தோண்ட விட்டுள்ளேன். நீங்கள் தோண்ட ஆரம்பித்ததும், ரஷ்ய எண்ணெய் முதலை 'காஸ்ப்ரோம்' உம், ஓடி வந்து என்னை இன்று சந்தித்தது. ஆகா இனி என் காட்டில் மழைதான்.' மகிந்தர் இவ்வாறு மனதிற்குள் பேசிக்கொள்வது கேட்கிறது.

அடுத்தமுறை போகும்போது தம்பி கோத்தபாயாவையும் கூடிச் செல்ல வேண்டும். 'இந்து ராம்' ஏதோ தம்பியைப் பற்றி காரசாரமாக எழுதியிருக்கிறானாம். இரத்தினபுரியில் ஏதாவது அரிய மாணிக்கங்கள் கிடைக்குமாவென்று பார்க்க வேண்டும்.

-வல்லிபுரத்தான்

Geen opmerkingen:

Een reactie posten