தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 15 augustus 2011

பக்கசார்பால் அழிந்தவர்தான் அதிகம் வல்லிபுரத்தான்°°

புலிகள் வழக்கில் புதிதாக மூக்கை நுளைக்கும் பிரித்தானியா: Report !
14 August, 2011 by admin
இறுதிக்கட்டப் போரில் தாம் ஆயுதங்களை மெளனிப்பதாகவும், புலிகள் தங்கள் இலக்கை அடைய அரசியல் பாதையைப் பயன்படுத்துவார்கள் என்றும் அதன் சிரேஷ்ட தலைவர்களில் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். அத்தோடு மட்டுமல்லாது அவ்வியக்கம் இலங்கை இராணுவத்தால் வெல்லப்பட்ட பின்னர் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றிய விதித்துள்ள தடை தேவையற்றது எனக்கூறி விக்டர் கொப்பே வழக்கு தொடுத்துள்ளார். T208/11 என்று அழைக்கப்படும் இந்த வழக்கு ஐரோப்பிய மேல் நீதிமன்றத்தால் ஏற்றுகொள்ளப்பட்டு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஏதாவது ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டு தமது வாதங்களை முன்வைப்பதாயின் செப்டெம்பர் 1ம் திகதிக்கு முன்னதாக அந் நாடு விண்ணப்பிக்கவேண்டும் என நீதிபதி ஆணையிட்டிருந்தார்.

முதலில் இவ்வழக்கை சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், தற்போது தாமும் இவ்வழக்கில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் நெதர்லாந்து ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது. தற்போது அதிர்ச்சிகரமாக பிரித்தானியாவும் விண்ணப்பித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுச் செயலகம் இந்த விண்ணப்பத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக புலிகள் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் விக்டர் கொப்பே அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார். இதனால் தற்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. அதாவது பிரித்தானியாவும் நெதர்லாந்து அரசும் கூட்டாகச் சேர்ந்து விடுதலைப் புலிகள் மீதுள்ள தடையை நீக்கவேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளது.

T208/11 என்ற வழக்கில் புலிகள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் விக்டர் கொப்பே மிகவும் திறமையான சட்டவல்லுனர் ஆவார். விடுதலைப் புலிகளின் மேல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடை தற்போது பல தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்று இவர் ஏற்கனவே ஆதாரங்களை நீதிமன்றில் சமர்பித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் தமிழர்களைக் கைதுசெய்வதற்கு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற காரணத்தைக் காட்டி கைதுசெய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சனல் 4 வீடியோவைப் பார்த்தேன் அது அதிர்சிகரமான வீடியோ எனப் பிரித்தானியப் பிரதமர் தெரிவித்ததும், தமிழர்கள் நடத்தும் ஒவ்வொரு விழா மற்றும் போராட்டங்களில் பங்குபற்றும் பிரித்தானிய எம்பீக்களும் என்ன செய்கிறார்கள் ? தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் தமக்கு வோட்டுகள் தேவை என்பதனால் அவர்கள் புலம்பெயர் தமிழர்களோடு இணைந்திருப்பது போல ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார்களே தவிர உண்மையாக அவர்கள் தமிழர்களுக்காக உழைக்கவில்லை என்று தான் தோன்றுகிறது. சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய பல வீடியோக்களைப் பார்த்தபின்னரும் பிரித்தானிய அரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெறும் வழக்கில் தம்மை ஆஜர்படுத்தியுள்ளது என்றால் இதன் அர்த்தம் என்ன ?

அதாவது புலிகள் மேல் உள்ள தடையை எடுக்கக்கூடாது என்பதில் பிரித்தானியா இவ்வளவு நாட்டம் காட்டவேண்டிய அவசியம் என்ன இல்லை இவ்வளவு அவசரம் என்ன ? ஒரு புறத்தில் போர்குற்ற விசாரணை தேவை என்கிறது. மறுபுறத்தில் தமிழர்கள் தலையில் முழகாய் அரைக்கிறது. இவர்கள் போடும் இரெட்டை வேடம் தற்போது கலையும் நிலைதோன்றியுள்ளது. பிரித்தானிய அரசியல்வாதிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணிவரும் பல அமைப்புகள் இருக்கின்றன. இவர்கள் பிரித்தானிய அரசின் வெளியுறவுக்கொள்ளை என்ன ..அதிலும் குறிப்பாக தமிழர்கள் மற்றும் புலிகள் குறித்த பிரித்தானிய அரசின் வெளியுறவுக்கொள்ளை என்ன என்பது குறித்து ஆராய்வது நல்லது. முதலில் இவ்விடையத்தில் தீர்க்கமான முடிவை எட்டிய பின்னரே தமிழர்கள் யாருடன் இணைந்து செயல்படுவது என்பது குறித்து சிந்திக்க முடியும்.

சர்வதேசம் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி அவர்களை ஒரு தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தியது. ஆயுதப் பாதையில் இருந்து அவர்கள் அரசியலுக்கு வர எந்த ஒரு நாடும் அவர்களுக்கு இடங்கொடுக்கவில்லை அதற்காக சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் இல்லை என்றுதான் கூறவேண்டும். பெரும் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கும் ஐரோப்பிய நாடுகள் இதனைச் செய்யத் தவறிவிட்டது. பிரித்தானியாவில் கலவரங்கள் மூண்டு இளைஞர்கள் கடைகளை உடைத்து அரச சொத்துகளை நாசம்செய்தபோது பெரும் மிதவாதப் போக்கோடு நடந்துகொண்ட பிரித்தானியா போன்ற பாரிய ஜனநாயக நாடுகள், புலிகள் விடையத்தில் மிகவும் குறுகிய மனப்பாண்மையைக் கொண்டுள்ளது தமிழர்களுக்கு பெரும் சாபக்கேடாக அமைந்துள்ளது.

அதிர்வுக்காக

வல்லிபுரத்தான்.

Geen opmerkingen:

Een reactie posten