தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 augustus 2011

படையினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது : சிங்கள ஊடகம்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 04:17.17 AM GMT ]
சிறிலங்காவில் அவசரகால நிலை நீக்கத்தையடுத்து இனிவரும் காலங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ எவரையும் விரும்பியவாறு கைது செய்ய முடியாது என சட்டத்தரணி புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் நாட்டின் சாதாரண பொதுமக்களை இராணுவத்தினர் கைது செய்ய முடியாது.  அத்துடன் எவரையேனும் கைது செய்ய வேண்டுமாயின் பொலிஸார் போதியளவு சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்படும் நபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட நபர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நடத்தும் போராட்டங்களின் போது பொலிஸார் தலையீடு செய்ய முடியும் என்ற போதிலும், எவரையும் கைது செய்ய முடியாது.
கடந்த 30 ஆண்டுகளாக அவசரகாலச் சட்டத்திற்கு பழக்கப்பட்ட இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் சாதாரண சட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten