தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 augustus 2011

தூக்குக்கு எதிராக பெண் ஒருவர் தீக்குளிப்பு மரணம்!- அவர் எழுதிய உருக்கமான கடிதம்

[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 03:12.28 PM GMT ]
பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.


காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செங்கொடி ( வயது 27)  என்பவரே இவ்வாறு தீக்குளித்து இறந்தவராவார்.
மக்கள் மன்றம் இயக்கத்தில் உறுப்பினராக உள்ள இவர், இன்று மாலை  காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை  எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.
இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
செங்கொடி தீக்குளிப்பதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விடயத்தில் தலையிட்டு தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten