[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 05:53.50 PM GMT ]
புதுடில்லியில் நடைபெற்ற தமிழ்க்கட்சிகளுக்கான மாநாட்டில் அனைத்துக் கட்சிகளினாலும் தீர்மானித்து வைக்கப்பட்டிருந்த அறிக்கையிலிருந்து சுயநிர்ணய உரிமை, தமிழத்தேசம் ஆகிய சொற்களை நீக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட நான்கு கட்சிகள் வற்புறுத்தியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, தமிழ்க் காங்கிரஸ் தனித்தொரு அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக தெரியவருகின்றது. இது குறித்து அக்கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமான சுதர்சனம் நாச்சியப்பன் ஏற்பாடு செய்திருந்த புதுடில்லி மாநாட்டில் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளினால் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் தீர்மானத்தை எட்டுவதற்க்கு அனைத்துக் கட்சிகளும் ஆரம்பத்தில் உடன்பட்டிருந்தன.
பின்னர் 24ம் திகதி குறித்த மாநாட்டுக்கு வந்த சுதர்ஸனம் 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன். ஏற்கனவே தயாரித்து கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு காணப்பட்டிருந்த அறிக்கையை பார்வையிட்டு அதன் மூன்றாம் பந்தியை மாற்றி எழுதும் படி மீள மீள வலியுறுத்திக் கேட்டிருந்தார்.
இதன் பின்னர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட புளெட், தமிழர்விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்(பத்மநாபா அணி), ஈ.என்.டி.எல்.எவ், ஆகிய கட்சிகள் குறித்த அறிக்கையின் முன்றாம் பந்தியில் உள்ள சுயநிர்ணய உரிமை என்ற சொல்லை நீக்கவேண்டும் எனவும் நீக்காவிடின் கையெழுத்திடமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளர்.
அத்துடன் தமிழ்த் தேசம், சுயநிர்ணய உரிமை ஆகிய சொற்களை நீக்கி வேறொரு அறிக்கை தயாரித்து கையொப்பமிட வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளனர். எனினும் மேற்படிச் சொற்கள் நீக்கிய அறிக்கைக்கு முன்னாள் எம்.பிக்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் ஆகியோர் மறுப்புத் தெரிவித்திருக்கின்றனர்.
பின்னர் சுயநிர்ணய உரிமை, தமிழ்த் தேசம் ஆகிய சொற்கள் உள்ளடங்கிய அறிக்கையை கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சி, ரெலொ, ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் காங்கிரஸ் ஆகியன கையொப்பம் இட்டு சமர்ப்பிக்கலாம் என கேட்க்கப்பட்டதற்கு கூட்டமைப்பு உடன்படவில்லை.
இந்நிலையில் குறித்த சொற்கள் உள்ளடங்கிய அறிக்கையை தமிழ்க்காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமர்ப்பித்திருக்கின்றார் என்றார். அந்த அறிக்கையின் பகுதி இங்கே.
மேற்கத்திய குடியேற்றவாத ஆட்சி 1948ஆம் ஆண்டில் முடிவுற்ற காலந்தொட்டு, தமிழ் மக்கள் இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பான அடிப்படைகள் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்திருக்கின்றனர். ஒன்றன்பின் ஒன்றாக அதிகாரத்துக்கு வந்த பற்பல அரசுகள், அதிகாரக் கையளிப்புத் திட்டம் ஒன்றைக்கூட சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
என்ற காரணத்தைக்கூறி, தமது சிங்கள பெரும்பான்மைப் பலத்தைப் பிரயோகித்து, அவ்வரசுகளோடு மேற்கொள்ளப்பட்டுவந்த பேச்சுவார்த்தைகளை மட்டுமன்றி ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களையும் தோல்வியடையச் செய்தன. இவ்வாறான அறுபதாண்டு அனுபவம் முற்றுமுழுதாக மீண்டுமொருமுறை கடந்த ஓராண்டில் பரீட்சிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற வேளையிலிருந்து தமிழ் மக்களின் தனித்துவமான அடையாளத்தை மழுங்கடிப்பதற்கான தனது நிகழ்ச்சி நிரலை இலங்கையரசு மேலும் வலுப்படுத்தியுள்ளது.
தமிழரது மொழி, கலாச்சார, சமூக மற்றும் சமய அடையாளங்களையும் பொருளாதார வாழ்வையும் அழித்தொழிப்பதற்கும் வட-கிழக்கில் (தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் உட்பட, அவர்கள் குடியேறுவதை தடுத்து) ஏற்படுத்தப்பட்டுவரும் பலாத்காரச் சிங்களக் குடியேற்றத்துக்கும் வட-கிழக்கில் இன்று நிலவும் இராணுவப் பிரசன்னம் தீவிரமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தனித்துவமானதொரு இனமான தமிழர்களின் இருப்பை அழிப்பதே இத்திட்டத்தின் இறுதி இலக்காகும்.
இந்தப் பின்னணியில், இலங்கைத் தீவிலுள்ள தமிழ் மக்கள் தனியொரு இனமான தமது இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு ஏதுவாக அவர்களை ஒரு தனித்துவமான தேசம் எனவும் அவர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையர் எனவும் அங்கீகரிப்பது இன்றியமையாததொன்று என்பது எங்கள் வலுவான கருத்தாகும்.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் மட்டுமே இலங்கை அரசுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் அர்த்தமுள்ளதாக அமையமுடியும்.
ஆதலால் தமிழ்த் தேசம் முன்வைக்கும் இந்த உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்குமாறும் ஒரே நாட்டினுள் எட்டப்படத்தக்க எந்தவொரு தீர்வுக்கும் இதுவே அடிப்படையாக அமையுமென இடித்துரைக்குமாறும் நாங்கள் இந்திய நாட்டிடமும் அனைத்துலக சமூகத்திடமும் விண்ணப்பஞ் செய்துகொள்கின்றோம்.

Geen opmerkingen:
Een reactie posten