தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 augustus 2011

மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதும், சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன!- பிள்ளையான்

[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 12:37.42 PM GMT ]
கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும், இதுவொரு வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சித் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மர்மமனிதன் தொடர்பான உண்மைத்தன்மையினை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது. இந்நடவடிக்கையினால் இப்பகுதியில் ஓர் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையிலான உறவினையும் சீர்குலைத்துள்ளது. அத்துடன், பல பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.
இம் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இதுவொரு வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், சிலரின் திட்டமிட்ட வகையிலான மக்களை குழப்பத்திலும், அச்ச உணர்விலும் ஆழ்த்துகின்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதையும் நிராகரிக்க முடியாது.
இம் மர்மமனிதன் பிரச்சினை தொடர்பில் விசாரனை நடத்தி அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது பாதுகாப்புத் தரப்பினரின் முக்கியமான கடமையாகும். சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டத்தை மதித்து வன்முறையை நாடாமல் இப்பிரச்சினை தீர்வுகான முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியல் பேதங்களுக்கு அப்பால் மக்களின் முக்கிய பிரச்சினையாக இதனைக் கருதி இணைந்து செயற்பட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்.

30 வருடங்களாக கடுமையான யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ்நிலையில் மீண்டுமொரு அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அனுமதிக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten