தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 augustus 2011

மர்ம மனிதர்களை இராணுவத்தினரே காப்பாற்றி வெளியேற வைத்தனர்!-ஆனைக்கோட்டை பிரதேச மக்கள்

[ செவ்வாய்க்கிழமை, 30 ஓகஸ்ட் 2011, 01:14.09 PM GMT ]
எங்கள் கிராமத்திற்கு வந்த மர்ம மனிதர்களை இராணுவத்தினரே காப்பாற்றி வெளியேற வைத்தனர் என யாழ். ஆனைக்கோட்டை பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று மாலை 8.30 மணியளவில் பிரதேசத்திலுள்ள வீடொன்றினுள் பெண்ணொருவர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டின் ஜன்னல் வழியே கறுப்பு நிறத்தில் கையொன்று நுழைவதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து உயரமான ஆணொருவர் கறுப்பு நிறத்தில் தப்பியோடுவதை அயல் வீட்டார்கள் கண்டுள்ளனர்.
அவனைத் துரத்திக் கொண்டு சென்றபோது. அவன் கோம்பயன்மணல் மயானத்தில் பின்பகுதியில் உள்ள குப்பைமேட்டுப் பகுதியில் சென்று மறைந்துள்ளான்.
மறுபடியும் மாலை 9.45 மணியளவில் மேற்குறித்த பகுதியிலேயே மூதாட்டியொருவர் முற்றத்தில் உட்கார்ந்து இரவு சாப்பாடு உண்டு கொண்டிருந்துள்ளார்.
அப்போது மரத்திலிருந்து கறுப்பு நிறத்தில் உருவமொன்று குதித்ததைப் பார்த்து அதிர்ந்து போய் கூச்சலிட்டுள்ளார். இந்நிலையில் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த மக்கள் கூடி அந்த மர்ம மனிதனைத் துரத்தியபோது பிரதான வீதியை நோக்கி அவன் ஓடியுள்ளான்.
ஆனால் பிரதான வீதிக்கு மக்கள் வந்தபோது பிக்கப் வாகனமொன்றில் இராணுவத்தினர் நின்றுள்ளனர். இதனால் அதிர்ந்து போன மக்கள் விடயம் தொடர்பாக இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் நீங்கள் வீடுகளிற்க்குள் சென்று இருக்குமாறு இராணுவத்தினர் மக்களை அச்சுறுத்தினர். எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் தொடர்ந்தும் வீதிகளில் நின்றிருக்கின்றனர்.
பின்னர் வாகனத்தில் வந்த இராணுவத்தினர் சென்றவுடன் தொடர்ச்சியாக 5தடவைகள் இராணுவத்தினர் மூன்று மூன்று பேராக வந்து மக்களை துரத்தியுள்ளனர். இதனால் மக்கள் மெல்ல வீடுகளிற்குள் சென்றவுடன் மறைந்திருந்த மர்ம மனிதனை இராணுவத்தினர் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இதேபோல் இரவு 8.30மணிக்கு வந்த மர்ம மனிதனை குறித்த குப்பைமேட்டுப் பகுதிக்கு நள்ளிரவு 11.30 மணியளவில் வந்த வாகனமொன்று ஏற்றிச் செல்வதை மக்கள் சிலர் கண்டுள்ளனர்.
இவ்வாறு தெரிவித்த மக்கள், தங்கள் கிராமத்திற்கு இதுவரை காலமும் படையினர் இவ்வாறு வந்தது கிடையாது எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று காலை குறித்த வாகனம் வந்து சென்ற இடத்தை அவதானித்தபோது அந்த இடத்தில் கறுப்பான எண்ணெய் போன்றதொரு திரவம் சிந்திக் கிடந்ததாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten