[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 09:05.17 AM GMT ]
அவசரகாலச் சட்ட நீக்கத்தினுள் ஆயிரம் செய்திகள் அடங்கிக் கிடக்கின்றன. அதனை அலசி நாங்கள் அடுத்துச் செய்ய வேண்டிய பணி என்ன என்பதைத் தீர்மானிக்க உதவுவதே எங்களின் நோக்கம்.
கடந்த ஓரிரு மாத காலத்திற்குள் ஈழத்திலும், அதன் தாக்கமுள்ள களங்களிலும் பல பல மாறுதல் நடந்தேறியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலோடு ஈழ அரசியல் யாரும் எதிர்பார்க்காத சூடு பிடித்தது. அதுவும் அமைச்சரவை உள்ளிட்ட பிரதானிகள் வடக்கிலும் கிழக்கிலும் குவிக்கப்பட்டு அப்பிரதேசம் ஆடுகளமாக்கப்பட்டது.
யாருக்கு வெற்றியோ அவர்களின் பக்கம் வட-கிழக்கு என்ற செய்தியை சர்வதேசத்திற்கு சொல்லவிழைந்த சிறீலங்காவிற்கு தமிழ்மக்கள் சுட்டிக்காட்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்பை... அவர்கள் தான் தமிழர்களின் தலைமையென்று.
அடுத்து ஹிலாரி இந்தியா சென்றார். ஜெயலலிதாவைச் சந்தித்தார். ஜெயலலிதா தமிழீழ அரங்கில் தாக்கம் பெற்ற சீமானைச் சந்தித்தார். சீமான் தமிழீழம் என்ற கோரிக்கையில் இருந்து இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஜெயலலிதா எடுக்கும் முடிவுகளிற்கு ஆதரவு தருவதாக மாற்றம் பெற்றார்.
இப்படி மாறிய களத்தில் இலங்கை அரசை நோக்கி மூன்று வார காலக்கெடு விதித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முடியாதென்றது அரசு...
இதனிடையே அவசர காலச் சட்டத்தை நீக்க “செய்தி கசியாமல்” அழுத்தம் கொடுக்கப்பட்டது.
யோசித்தது சிங்களம். கிறீஸ் மனிதர்கள் களத்தில் இறக்கப்பட இனப்பிரச்சினையென்ற ஒன்றே எல்லோராலும் மறக்கப்பட்டது. அவசரகாலச் சட்டத்தை நீக்காமல் விடுவதற்கும் இந்தக் கிறீஸ் மனிதர்கள் காரணம் காட்டப்பட்டார்கள்.
இதுவரை தமிழர்களிற்கு சவரம் செய்தும், சாராயம் விற்றும் வந்த சிறீலங்காப் படைகளிற்கும் தங்களிற்கு இன்னொரு வேலை, “தமிழர்களைத் தாக்கும் வேலை”, இருக்கிறது என்பது நினைவிற்கு வந்தது. விளைவாக பதட்டம் ஏற்படுத்தப்பட்டு மக்களும் படைகளும் எதிரிகளாக்கப்பட்டனர்.
இருந்தும் இந்தக் கால கட்டத்திலேயே காங்கிரஸின் நாச்சியப்பன் சுதர்சனம் எட்டு இலங்கைத் தமிழ்க் கட்சிகளை ஒன்றாக டெல்லிக்கு அழைத்து மாநாடு வைத்தார். அங்கு இராணுவம் வட-கிழக்கில் இருந்து வெளியேற வேண்டும் ஒன்று ஒட்டுமொத்த தீர்மானத்தை இந்தக் கட்சிகள் கொண்டுவந்தன.
ராஜ்யசபாவில் இலங்கை இனப்பிரச்சினை குறித்த விவாதம் தமிழகக் கட்சிகளுடன் பாரதிய ஜனதாக் கட்சியும் சேர்ந்து சிறீலங்கா அரசை கண்டித்து இந்திய அரசின் காட்டமான நடவடிக்கைகளிற்கு விண்ணப்பித்தன.
“கிறீஸ் மனிதர்களால்” ஏற்படுத்தப்பட்ட இவ்வளவு கொந்தளிப்புக்களின் மத்தியிலும் நாடு பதட்டப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் போதே இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச அவசரகாலச் சட்டத்தை அவசர அவசரமாக நீக்குகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் எல்லாச் சதிகளுமே தோற்றுப் போய் மேற்குலகிடம் சரணகதியாவதற்கான முதற்படியை அவர் எடுத்துவிட்டார்.
இந்த அவசரகாலச் சட்ட நீக்கத்தை அதிகாரபூர்வமாக வரவேற்ற அமெரிக்கா தனது முதன்நிலை அதிகாரியை எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு அனுப்புகிறது. இந்தியாவோ ராஜபக்சாவின் அவசரகாலச் சட்ட நீக்க அறிவிப்பை நடைமுறைப்படுத்த நெருக்கம் கொடுப்போம் என்கிறது. அத்துடன் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றையும் விரைவில் அனுப்பத் தயாராகிறது.
இவ்வாறு இந்த ஒரு அவசரகாலச் சட்ட நீக்கத்தை வைத்து அடுத்தபடியாக ஒரு தீர்விற்கான முயற்சிக்கு மேற்குலகம் தயாராகிறது. அதாவது வட-கிழக்கு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசி “ஒன்றுபட்ட இலங்கைக்குள்” நிரந்தர சமாதானமாக வாழும் ஒரு தீர்வை நடைமுறைப்படுத்துங்கள் என்பதே அது.
அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல தமிழர்களின் தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் கூட அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அண்மையில் வெளியான செய்திக்குறிப்பொன்று குற்றஞ்சாட்டுகிறது. புலம்பெயர்ந்த தமிழர்களிற்கும் இந்தத் தீர்விற்கு ஆதரவு வழங்க வேண்டுமென்ற வேண்டுகோள் மேற்குலகால் ஏற்கனவே விடுபட்டாகி விட்டது.
இந்த நிலையில் அவசரகாலச் சட்ட நீக்கம் ராஜபக்ச'க்களின் சரணாகதியின் முதற்படி. இதிலிருந்து நாங்கள் அடைய வேண்டிய இலக்கை நோக்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்வதற்கு புலம்பெயர்ந்த தமிழ்த் தலைமைகள் தங்களின் ஆதரவைக் கொடுக்க வேண்டுமேன்பதே எமது விருப்பமாகும்.
ஏனென்றால் யதார்த்தம், புறச்சூழல், அகச்சூழல் என்பன இன்றைய தேதியில் எப்படியுள்ளனவோ அப்படியே நாங்கள் அதனை ஏற்க வேண்டும். வட-கிழக்கில் இன்று ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமானால் அதற்குரிய முடிவை எடுக்கிற சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனோடிணைந்த கட்சிகளுமே உள்ளன. அவர்களின் தீர்வு முயற்சிகளிற்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குவதே இன்றைய காலத்தின் கடமை.
இவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர் தலைமைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கினால் அது அவர்களின் பேசுபலத்தை அதிகரிக்கும். அவர்களது கோரிக்கைகளிற்கு வலுச்சேர்க்கும். அவர்களை சமபல பேசு சக்தியாக அரசோடு ஒரு மேசையில் அமரச் செய்யும். இதுவே இன்றைய தேதியில் நாம் எதிர்நோக்கியுள்ள பாரிய தேவை.
2009ற்குப் பின்னர் இலங்கைக்கு பயணம் செய்த ஒவ்வொருவரும் அல்லது இலங்கையிலுள்ள உறவுகளுடன் தொடர்பிலுள்ள ஒவ்வொருவரும் தற்போது வடகிழக்கு எந்த நிலையிலிருக்கிறது என்பதையும் சிங்களவர்களின் பிரசன்னம் எந்தளவில் இருக்கிறது என்பதையும் நன்கறிந்திருப்பார்கள்.
எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒவ்வொருவரும் இன்றைய களயதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியில் தங்களையும் பங்காளர்களாக இணைப்பார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதுதான் அவசர காலச் சட்ட நீக்கத்தின் அடுத்தபடிக்கு இலங்கைத் தீவை தள்ளிச் செல்லும்.
vannan.kugendra@gmail.com

Geen opmerkingen:
Een reactie posten