லண்டனில் உள்ள ஐந்து நகரங்களில் கலவரத்தில் ஈடுபட்ட 2000 க்கும் மேற்பட்ட கலகக்காரர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக பொலிஸாரினால் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று இரவுகளாக இடம்பெற்ற காடைத்தனமான சம்பவங்களை பொதுமக்களும் பொலிஸாரும் அவமானமாகக் கருதுகின்றார்கள்.
எரிகிற வீட்டில் பிடிங்கியது இலாபம் என லண்டன் தெருக்களில் உள்ள கடைகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் பகல் கொள்ளையில் ஈடுபட்ட ஆறு பெண்கள் உட்பட பலரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளார்கள்.
லண்டன் சம்பவம் தொடர்பாக Simon Foy என்ற பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,
வன்முறை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட பலரின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும்.
இவ்வாறான வன்முறைகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் தொடரும் கலவரம், கொள்ளை : "பிரிட்டனின் முதல் கலகம்' என வர்ணனை
லண்டன் : பிரிட்டன் தலைநகர் லண்டனில், நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரத்தின் தொடர்ச்சியாக, நகரின் பல்வேறு இடங்களில், கொள்ளை, மோதல்கள் தொடர் கதையாகியுள்ளன. இதுவரையிலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, "21ம் நூற்றாண்டில், பிரிட்டனில் நடந்த முதல் கலகம்' என, பிரிட்டன் பத்திரிகைகள் இச்சம்பவங்களை வர்ணித்துள்ளன.
லண்டனின், டோட்டன்ஹேம் பகுதியில், கடந்த 4ம் தேதி, மார்க் டக்கன் என்பவரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். வெகுகாலமாக, போலீஸ் கண்காணிப்பில் இருந்துவந்த மார்க் டக்கன், ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட பிரபல தாதா. இவரது சாவுக்கு நீதி கேட்டு, நேற்று முன்தினம் ஏராளமானோர் டோட்டன்ஹேம் பகுதியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், அங்கிருந்த கட்டடங்கள், வாகனங்களுக்குத் தீ வைத்தனர். குடியிருப்புகள், ஏ.டி.எம்., இயந்திரங்கள், வணிக வளாகங்களை சூறையாடினர்.
இதனிடையே, டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் என்பீல்ட், பிரிக்ஸ்டன், டால்ஸ்டன், வால்தாம்ஸ்டவ் மற்றும் ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேற்று பரவியது. இப்பகுதிகளில் உள்ள, ஏராளமான வணிக வளாகங்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் ஆகியவை கலவரக்காரர்களால், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. பல இடங்களில், போலீசாரைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
லண்டன் மாநகர போலீஸ் அதிகாரி கிறிஸ்டைன் ஜோன்ஸ், இதுகுறித்து கூறியதாவது: டோட்டன்ஹேம் கலவரம், பிற பகுதிகளுக்கும் பரவ, ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களே காரணம். பிளாக்பெர்ரி உள்ளிட்ட மொபைல்போன்களில் உள்ள, இ-மெயில் வசதியைப் பயன்படுத்தி, எளிதில் ஒன்று சேரும் கலவரக்காரர்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தாக்குகின்றனர். இவற்றை காணொளி பதிவுகளாக, யூ டியுப் போன்ற, இணையதளங்களில் வெளியிடுகின்றனர். கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசி, மற்றும் ஸ்கை நியூஸ் ஊழியர்களையும், கலவரக்காரர்கள் தாக்கியுள்ளனர். கலவரம் தொடர்பாக, இதுவரையிலும், 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டன் முழுவதும், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, கிறிஸ்டைன் ஜோன்ஸ் கூறினார்.
டோட்டன்ஹாம் வன்முறைகள்
லண்டனில் வழமையில் மிக அமைதியாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்படுகின்ற பல வீதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவும் வன்முறைச் சம்வங்கள் அங்காங்கே இடம்பெற்றுள்ளன.இதற்கிடையே, அவசரமாக தனது கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு திரும்பியுள்ள பிரிட்டனின் உட்துறை அமைச்சர் தெரஸா மே, மூத்த பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து கள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்துள்ளார்.
கார்கள் எரிக்கப்பட்டும், கடை கண்ணிகள் சூறையாடப்பட்டும் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டும் தெருக்களில் வன்முறையாளர்கள் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
நேற்று மாலை மட்டும் 100க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதுடன், பொலிசார் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மார்க் டக்கன்- பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்சனிக்கிழமை இரவு, முதலில் மிக மோசமாக வன்முறை வெடித்த டோட்டன்ஹாம் பகுதியில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தப்பகுதி வழமைக்குத் திரும்ப இன்னும் சில காலம் எடுக்கும் என அங்குள்ள பிரதேசவாசிகளில் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
கடந்தவாரத்தில், வடக்கு லண்டன், டோட்டன்ஹாம் பகுதியில் கறுப்பின இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன், இங்கு பிரச்சனை ஆரம்பித்தது.
அந்த சம்பவம் குறித்து சுயாதீனமான பொலிஸ் முறைப்பாட்டு ஆணையம் ஒன்று விசாரணை நடத்திவருகின்றது.
லண்டனில் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்றான டோட்டன்ஹாம், அடிக்கடி இனரீதியான குழப்பங்கள் வெடிக்கக்கூடிய இடமாக இருந்து வந்துள்ளது.
அங்கு வாழ்கின்ற கறுப்பினச் சமூகத்தில் சிலரிடத்தில், தமது இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகள் இல்லையென்ற கவலையும் இருக்கின்றது.
ஆனால் சாக்குபோக்கு சொல்லி இந்த வன்முறைகளை கணக்கில் எடுக்காமல் விட்டுவிட முடியாது என லண்டனில் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான துணை மேயர் கிட் மோல்ட் ஹவுஸ் கூறியுள்ளார்.
இந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கிறது.
நாட்கள் நகரநகர எல்லோரின் கண்களும் பிரிட்டன் தலைநகரில் குவிகின்றன.
ஒலிம்பிக் விவரணங்கள் லண்டனின் மதிப்பையும் பெருமையையும் மெருகுடன் விளம்பரப்படுத்திவரும் நிலையில், இவ்வாறான சம்பவங்கள் அதனை கெடுத்துவிடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். |
Geen opmerkingen:
Een reactie posten