மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் சிறிலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் 300 மில்லியன் கிலோ தேயிலையில், 78 வீதமானவற்றை ஈரான், ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளே வாங்கி வந்தன.
ஆனால் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறிலங்காவில் இருந்து 55 மில்லியின் கிலோ தேயிலை மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 30 வீதம் மட்டுமேயாகும்.
அரசியல் நெருக்கடிகளால் லிபியா, சிரியா போன்ற நாடுகளின் பிரதான துறைமுகங்களுக்கு தேயிலையை அனுப்ப முடியாத நிலை உள்ளதாக கொழும்பின் முன்னணி தேயிலை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான மலிக் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தடையும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
ஈரானில் இருந்து ஏற்றுமதியாளர்கள் தமக்கான கொடுப்பனவை உள்ளூர் வணிக வங்கி ஒன்றின் ஏற்பாட்டில் வேறு வழிமுறை ஒன்றின் ஊடாகவே பெறுவதாகவமு அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் நான்காவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், ஆண்டுதோறும் 10 மில்லியன் கிலோ தேயிலை அனுப்பப்படும் லிபியாவின் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா தேயிலை சபையின் பணிப்பாளர் ஹசித டி சில்வா தெரிவித்துள்ளார். |
Geen opmerkingen:
Een reactie posten