தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 augustus 2011

இலங்கையில் சீனா கால் ஊன்றி விடுமே: மறுத்தார் வைகோ !

02 August, 2011
இன்றைய தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை வைகோ அவர்கள் சந்தித்து ஈழத் தமிழர் தொடர்பாக விவாதித்துள்ளார். அத்தோடு 3 அம்சங்கள் அடங்கிய கோரிக்கை மனு ஒன்றையும் அவர் கையளித்துள்ளார். அதில் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் கோரியுள்ளார் வைகோ.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் செல்வதற்காக என்மீது வருத்தப்படக் கூடாது. இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாகச் செயல்படக் கூடாது என்றார் வைகோ.

அதற்கு பிரதமர், �இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்� என்றார். ஏற்கனவே, இலங்கைக் கடற்படைப் படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர். இலங்கை ஒருபோதும் நமக்கு ஆதரவாக இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும் என்றார் வைகோ. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும். அங்கே முகாமிட்டு உள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இனப்படுகொலைக் குற்றங்களுக்காக, பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

2. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத்தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும். இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைச்சதியைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது; பேரறிவாளன் குற்றம் செய்யவில்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ண அய்யர் எழுதி உள்ளார். பேரறிவாளனைக் கடுமையாகத் துன்புறுத்தித்தான், காவல்துறையினர் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றார்கள். இளம் வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், கடந்த இருபது ஆண்டுகளாகச் சிறையில் உள்ளார். அவரது வாழ்க்கை அழிந்து விட்டது. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை இரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்� என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

�உங்கள் கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கிறேன்� என்று பிரதமர் சொன்னர்.

3. முல்லைப்பெரியாறு அணையை உடைக்கக் கேரள அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறது. மத்திய அரசின் நீர்வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுக்கள், முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்து, அணை வலுவாகவே இருப்பதாக அறிக்கை கொடுத்து உள்ளன. இந்த வழக்கில், உச்சநீதிமன்றம், அணை வலுவாக இருப்பதாகவும், நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், தமிழகத்துக்குச் சாதகமாக ஏற்கனவே தீர்ப்பு அளித்து விட்டது.

அப்போது பிரதமர் குறுக்கிட்டு, �அணை கட்டி நூறு ஆண்டுகள் ஆகின்றதே ? என்று கேட்டார்.

�ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும். அந்த அளவுக்கு அணையை வலுப்படுத்துவதற்கான பணிகளை, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகம் செய்து உள்ளது என்றார் வைகோ.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை, வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள மாநிலச் சட்டமன்றத்தில், கேரள அணைகள் பாதுகாப்பு என்ற ஒரு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தனர். அதன்படி, தங்கள் மாநில எல்லைக்கு உள்ளே இருக்கின்ற அணைகளைப் பராமரிக்கவும், உடைக்கவும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும்; இதில் எந்த நீதிமன்றமும் தலையிட அதிகாரம் இல்லை என்றும் சட்டத்திருத்தம் கொண்டு வந்து உள்ளனர் என்றார் வைகோ.

பிரதமர், தெரியும் என்றார்.

அது இந்திய ஒருமைப்பாட்டுக்கே எதிரானது. அதை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், இப்போது, அதேபோன்றதொரு சட்டத்தை, மத்திய அரசே கொண்டு வர முனைந்து உள்ளது. அப்படியானால், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் தங்களுக்கே சொந்தம் என்று சொல்லும். இதுகுறித்து, தமிழக முதல்வர் தங்களுக்குக் கடிதம் எழுதி உள்ளார் என்றபோது, பிரதமர் �ஆமாம்� என்றார்.

இந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. அப்படி நிறைவேற்றுவதாக இருந்தால், தமிழகத்தின் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டும் என்றார் வைகோ. இவ்வாறு இவர்கள் சந்திப்பு இடம்பெற்றதாக வைகோவின் பிரத்தியேகச் செயலாளர் அதிர்வுக்குத் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten