[ வியாழக்கிழமை, 18 ஓகஸ்ட் 2011, 03:09.51 AM GMT ]
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இவர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்திய குற்றம் சுமத்தப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
உகண்டா பாலா என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் என்பவரே நாடு கடத்தப்பட்டவராவார்.
இவர் இலங்கையின் வடக்குகிழக்கில் உள்ளவர்களுடன் தொடர்புகொண்டு மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தி வந்ததாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பொலிஸாரின் தகவல்படி, பாலச்சந்திரனின் முகவர்கள், வெள்ளவத்தை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இயங்கிவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:
Een reactie posten