தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 augustus 2011

சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

[ வெள்ளிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2011, 05:04.46 AM GMT ]
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத் தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.
1986ம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி வரையிலான காலப் பகுதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட 1646 ஆவணங்களையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இவற்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆவணங்களும், சிறிலங்கா அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள இரகசியத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் அடங்கியுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்: சீனா லஞ்சம் கொடுத்தே பெற்றது - விக்கிலீக்ஸ்
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தைத்தைப் பெறுவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு சீனா பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான 1646 ஆவணங்களில் ஒன்றிலேயே, இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக அமைந்தது என்றும் அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அதற்கருகில் கைத்தொழில், வர்த்தக கட்டமைப்புகள் ஏதும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு இந்தத் துறைமுகத்தினால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் அனைத்துலக விமான நிலையமும் கூட வாடகை விமானங்களை தரையிறக்கவே பயன்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten