தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 augustus 2011

தாக்குதலுக்குள்ளான சிங்களவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் !

04 August, 2011
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்றிருந்த சிங்கள யாத்திரிகர்கள் மீது நேற்று சென்னையில் வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையிலிருந்து சென்றிருந்த 84 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கள யாத்திரிகர்கள் கொண்ட குழு மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது மூன்று பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து சென்னையிலுள்ள இலங்கைக்கான உதவித் தூதுவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாகவே தலையிட்ட உதவித் தூதுவர் அவர்களை பாதுகாப்பான மற்றொரு ஹொட்டலுக்கு இடம்மாற்றியதாகவும் தெரியவருகின்றது. இலங்கை யாத்திரிகர்கள் முன்னர் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்ற தாக்குதலை நடத்தயவர்கள், சிங்கள யாத்திரிகர்களை இன்று காலை 8.00 மணிக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேற்றிவிடவேண்டும் என எச்சரித்துச் சென்றிருந்தார்கள். இதனையடுத்தே மற்றொரு பாதுகாப்பான ஹொட்டலுக்கு அவர்கள் இடம்மாற்றம் செய்யப்பட்டனர். சிங்கள யாத்திரிகர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோதே அவர்கள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக இச்சம்பவத்தில் காயமடைந்த ஒருவரின் மனைவி தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தவர்கள் தம்மை இலங்கையர்கள் என அடையாளம் கண்டுகொண்ட பின்னரே தாக்குதலை நடத்தியதாக மற்றொரு சிங்கள யாத்திரிகர் தெரிவித்தார். தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், தம்மிடமிருந்த பொருட்களைப் பறித்து அவர்கள் எரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இச்சம்பவத்தையடுத்து அச்சமடைந்த நிலையிலுள்ள சிங்கள யாத்திரிகர்களைச் சந்தித்த இலங்கையின் உதவித் தூதுவர், நாளை வெள்ளிக்கிழமை அவர்கள் பாதுகாப்பான முறையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார். எல்பிட்டிய பகுதியிலிருந்து கடந்த 17 ஆம் திகதி புத்தகாயாவுக்கு யாத்திரை சென்ற இவர்கள் நாளைய தினமே கொழும்பு திரும்புவதாக இருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten