[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஓகஸ்ட் 2011, 07:28.55 AM GMT ]
கிறீஸ் பேய் விவகாரம் எங்கிருந்து கிளம்பியது, யாரால் உருவாக்கப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பது யார் என்ற விவாதங்கள் நடந்து கொண்டிருக்க பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை செய்து முடித்துள்ளது அரசாங்கம்.
கிறீஸ் பேய் என்று எதுவும் கிடையாது, எல்லாம் வெறும் புரளி தான்'' என்று திரும்பத் திரும்பக் கூறும் அரசாங்கம் மர்மமாக நடந்தேறும் சம்பவங்களின் பின்னணியைக் கண்டறியவில்லை.
புலிகள், புலிகள் ஆதரவு சக்திகள், புலிகளின் தோல்வியைச் சகிக்க முடியாத தரப்பினர் தான் இதற்குப் பின்னால் இருப்பதாக அரசாங்கம் அவ்வப்போது குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறது.
கிறீஸ் பேய் என ஒன்றில்லை என்று கூறும் அரசாங்கம் இதன் பின்னணியில் புலிகள் ஆதரவு சக்திகளே இருப்பதாகவும் கூறுகிறது. புலிகள் ஆதரவு சக்திகளே பின்புலம் என்று அடையாளம் காணப்பட்டால் அதில் ஏதோ ஒன்று இருப்பதாகத் தானே அர்த்தம்.
அதைவிட குறித்த தரப்பினரை அடையாளம் கண்டு கொண்டால் அவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது என்? கிறீஸ் பேய் என்பது உண்மையோ பொய்யோ அரசாங்கத்துக்கு இது வசதியாகவே அமைந்து விட்டுள்ளது.
இதன் பின்னணியில் எந்தத்தரப்பு இருந்தாலும், அரசின் நலனை முன்னிறுத்தியே இதுவரை கிறீஸ் பேய் விவகாரம் முன்னகர்த்தப்பட்டுள்ளது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
ஆங்காங்கே ஏற்பட்ட சிறு சிறு வன்முறைச் சம்பவங்களைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் அரசாங்கம் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் குடியிருப்புப் பகுதிகளை அண்டி படைமுகாம்கள் அமைக்கப்படுவது குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் இருந்து வந்தன.
குறிப்பாக கிழக்கில் ஒலுவில், கிண்ணியா போன்ற பகுதிகளில் கடற்படை முகாம்கள் நிறுவப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.
கிறீஸ் பேய் விவகாரத்தைத் அடுத்து கிண்ணியாவை ஒரு படை வலயமாகவே அரசாங்கம் மாற்றி விட்டது. கிண்ணியாவில் இருந்த கடற்படை முகாம் தாக்கப்பட்ட பின்னர் அங்கு சுமார் 1500 வரையிலான இராணுவத்தினரை அரசாங்கம் அனுப்பியது.
இப்போது அங்கு ஒரு நிரந்தர பிரிகேட்டை உருவாக்கியுள்ளது. மூன்று பற்றாலியன்களை கொண்டதே ஒரு பிரிகேட். தற்போது அங்கு இரண்டு பற்றாலியன்களே நிலைகொண்டுள்ளன.
எனவே மூன்றாவது பற்றாலியனையும் 224 பிரிகேட்டுக்கு அரசாங்கம் எந்தச் சிக்கலும் இன்றி அனுப்பி வைக்கப் போகிறது. இதேபோல கிழக்கில் தமிழ், முஸ்லிம் பகுதிகள் எங்கும் இராணுவத்தினரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, அம்பாறை மட்டுமன்றி புத்தளத்திலும் வடக்கிலும் இதேநிலை தான் தொடர்கிறது.
கிறீஸ் பேய் விவகாரத்தில் ஏற்படும் பதற்றத்தைத் தணிக்க அரசாங்கம் போருக்குப் பயன்படுத்தும் கனரக டாங்கிகளை அனுப்பி வைப்பது முக்கியமானதொரு விடயம்.
புத்தளத்திலும், கிழக்கிலும் வன்முறைச் சூழல் உருவானபோது வீதி எங்கும் இராணுவத்தினரின் டாங்கிகளும் துருப்புக்காவி கவச வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதை மக்களை அச்சுறுத்துவதற்கான ஒரு உளவியல் நடவடிக்கையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இந்தச் சாட்டைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்வதில் அரசாங்கம் தெளிவான கொள்கையைப் பேணியுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படுகின்ற கடைசிக் கட்டத்திலும் கூட மக்கள் அதன் தாக்கத்தை உணர்ந்து கொள்ள நேரிட்டுள்ளது.
இப்போது வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி தமிழ், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அதிகளவு படையினரும், பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக கிறீஸ் பேய்களுக்குத் தான் அரசாங்கம் நன்றி சொல்ல வேண்டும்.
போர் முடிவுக்கு வந்த பின்னர் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்ட பல இடங்களுக்கும் இப்போது படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். புதிய படை முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன.
இப்போது அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும், அண்மையில் குவிக்கப்பட்ட படையினர் விலக்கிக் கொள்ளப்படுவரா? என்பது சந்தேகம் தான்.
குழப்ப நிலைமையைக் காரணம் காட்டி அரசாங்கம் புதிதாகக் குவித்த படையினரை விலக்கிக் கொள்வதற்கு நீண்ட கால அவகாசத்தைக் கோரலாம்.
அதேவேளை மன்னார் கரையோரத்தை முற்றிலும் இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மன்னாருக்கு வடக்கேயுள்ள நாச்சிக்குடாவில் பாரிய கடற்படைத் தளம் ஒன்றை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்துள்ளார்.
நாச்சிக்குடாவில் முன்னர் விடுதலைப்புலிகளின் கடற்படைத் தளம் இருந்த பகுதியில் இலங்கைக் கடற்படையும் புதிய தளத்தை அமைத்துள்ளது.
சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் நிரந்தர கடற்படைத் தளமாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்துக்காக அந்தப் பகுதியில் 752 ஏக்கர் நிலத்தை கடற்படை சுவீகரித்துள்ளனர்.
வடமேற்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகத்தை இங்கு மாற்றுவதே கடற்படையின் அடுத்த திட்டம்.
இது ஒரு “கன்ரோன்மென்ற்'' தளமாக அமையப் போகிறது. “கன்ரோன்மென்ற்'' தளம் என்பது ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட பகுதி.
எந்தவேளையிலும் அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அகற்றப்படலாம் என்பதுடன் கடற்படையினருக்கான குடியிருப்புகளும் அதையொட்டி அமைக்கப்படலாம்.
மன்னார் கரையோரம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் கரையோரப் பகுதிகளில் புதிய முகாம்களை கடற்படை அமைக்கவுள்ளது.
முன்னதாக மன்னாருக்குத் தெற்கே முள்ளிக்குளம் என்ற இடத்தில் பாரிய “கன்ரோன்மென்ற்'' தளம் ஒன்றை அமைத்த கடற்படை அங்கு ரேடர்கள் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பொருத்தியுள்ளது.
இந்தநிலையிலேயே இப்போது மன்னாருக்கு வடக்கே கடற்படையின் ஆதிக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்பகுதி ஊடாகவே ஆயுதங்கள், பொருட்கள் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் அரசுக்கு இருக்கிறது.
அதைவிட வடமேற்கு கடற்பகுதியை எதிர்காலத்தில் மீன்பிடிப்பதற்குக் கூட அரசாங்கம் தடை செய்யலாம் என்ற பரவலான கருத்தும் உள்ளது.
மன்னார் கடற்பகுதியில் எண்ணெய் அகழ்வு நடைபெறும் சாத்தியங்கள் இருப்பதால், கரையோரப் பாதுகாப்பை அரசாங்கம் பலப்படுத்தி வருகிறது.
வடமேற்கு கடற்பகுதி மீன்பிடித் தடை வலயமாக மாற்றப்பட்டால் அதை நடைமுறைப்படுத்த நாச்சிக்குடா முக்கிய கேந்திரமாக அமையும்.
போர் முடிவுக்கு வந்தாலும் புதிய தளங்கள் அமைப்பதும், ஆயுத தளபாடங்களின் கொள்வனவும், படைக்குவிப்பும் ஓயவில்லை.
தமிழர் பகுதிகளில் இருந்து படைகளை விலக்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்க்கட்சிகள் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டிருக்க இலங்கை அரசோ படைக் குவிப்புக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறது.
சுபத்ரா

Geen opmerkingen:
Een reactie posten