இக்கட்டுரையை எழுதியவர் எங்கிருந்து தனது வீரத்தை கொட்டுகிறாரோ தெரியவில்லை.ஆனால் யாழ் மக்கள் இராணுவத்துக்கு எதிராக இன்றும் போராடுகிறார்கள்.அரசையும் எதிர்க்கிறார்கள்.இந்திய தமிழமைப்புகள் வன்னியில் தமிழர் இறந்தபின் வீரம் காட்டி,அப்பாவி சிங்களவரை தாக்கி உசுப்பேற்றி இலங்கை வாழ் தமிழருக்கு உயிராபத்தை கொண்டு வந்து தங்கள் அரசியலை
வளமாக்கிக்கொள்கிறார்கள்.இவரின் கருத்தைக்கேட்டால் எனக்கு
கண்ணதாசனின் "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா
சௌக்கியமா"என்று பாடல்தான் ஞாபகம் வருகிறது.அன்றே இவர்களை
அவர் இனம் கண்டுவிட்டார்.நம்ம தமிழர்தான் அழிவிலும் அடையாளம்
காணாது தவிக்கின்றனர்.
04 August, 2011
யாழ் திருநெல்வேலி கிழக்கு வலையப் பகுதியில் கட்டப்படவிருக்கும் அம்மன் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் அடிக்கல் நாட்டுவது தொடக்கம் முதல் மரியாதை அனைத்தும் ஒரு புத்தபிக்குவுக்கு வழங்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இராணுவ உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டு செங்கற்களை எடுத்துக் கொடுத்துள்ளனர். ஆயிரம் ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களைக் கொலைசெய்த இலங்கை இராணுவம் கோயில் கட்டும் புனிதமான இடத்தில் என்ன செய்கிறார்கள் ? இல்லை அவர்களை அழைத்தது யார் ? தமிழினக் கொலையை தடுத்து நிறுத்தாது அதனை பகையை மேலும் மூட்டிவிட்டு சிங்கள இராணுவம் தமிழர்களைக் கொலைசெய்ய காரணமாக இருந்த இந்தப் புத்த பிக்குகளுக்கு யாழ் தமிழர்கள் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ?
இவ்வாறான அநியாயமான, செயல்கள் நிறுத்தப்படவேண்டும். இனப்படுகொலை புரிந்த படையினரையும் அதனை ஊக்குவித்த புத்தபிக்குகளையும் புனிதமான சைவக் கோவில் வளாகத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது தமிழர்களின் விருப்பமாக அமைந்துள்ளது. தமது நாட்டிற்குள் சிங்களவர்கள் காலடி எடுத்துவைத்தாலே தாக்குதல் நடத்தும் தமிழ் நாட்டு உறவுகளைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய உண்டு.

Geen opmerkingen:
Een reactie posten