தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 augustus 2011

கிரீஸ் மனிதனை அடிக்கக்கூட்டாதாம்: இராணுவம் எச்சரிக்கை !

26 August, 2011
உங்கள் பகுதிக்கு கிறிஸ் மனிதன் வந்தால் அதனை எங்களுக்கு அறிவிக்க வேண்டும். கிறிஸ் மனிதனுக்கு யாராவது அடித்தால் நாங்கள் உங்களைச் சுடுவோம் என வடமராட்சி கிழக்கு மக்களுக்கு இராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வடமராட்சி கிழக்கு கிராமங்களான செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, வத்திராயன், உடுத்துறை, ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்ற இராணுவத்தினர் இந்த உத்தரவை விடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 551ஆவது படைப்பிரிவின் சிவில் நிர்வாக அதிகாரி ஜயந்த டி சில்வா வடமராட்சிகிழக்கில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்து கிறிஸ் மனிதனை யாரும் தாக்ககூடாது என்றும் கிறிஸ் மனிதன் ஊருக்குள் வந்தால் தங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கிறிஸ் மனிதன் அச்சத்தால் வடமராட்சிகிழக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் அச்சத்துடனேயே வாழ்கின்றனர். இதனால் அவர்களின் நாளாந்த தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலை வேளையில் கடற்தொழிலுக்கு ஆண்கள் செல்லும் போது வீடுகளுக்குள் புகும் இராணுவத்தினர் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கிறிஸ் மனிதனின் அச்சத்தால் பெண்கள் வீட்டில் தனியாக இருக்க அஞ்சுகின்றனர்.

வடமராட்சி கிழக்கில் நாளுக்கு நாள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்து வரும் நிலையில் இராணுவத்தினரின் இந்த அறிவித்தல் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. இதேவேளை இராணுவத்தினருடன் ஈ.பி.டி.பியைச்சேர்ந்த சிறிரங்கேஸ்வரன் என்பவரும் இராணுவத்தினருடன் அங்கு காணப்பட்டதாக வடமராட்சிகிழக்கு மக்கள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten