தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 augustus 2011

பிரதமர் மன்மோகன்சிங்குடன் வைகோ சந்திப்பு - ஈழப்பிரச்சினை பற்றி கலந்தாலோசனை

[ செவ்வாய்க்கிழமை, 02 ஓகஸ்ட் 2011, 01:06.49 PM GMT ]
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன்சிங்கை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
"லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாக, தமிழர்களுக்கு எதிராகவே இந்தியா செயல்பட்டு இருக்கின்றது. இதைச் சொல்வதற்காக என் மீது வருத்தப்படக் கூடாது. இனி உலக அரங்கில் இலங்கை அரசுக்குச் சாதகமாகச் செயல்படக் கூடாது," என்றார் வைகோ.
அதற்கு பிரதமர், "இலங்கைக்கு நாம் உதவவில்லை என்றால், அங்கே சீனா கால் ஊன்றி விடும்" என்றார்.
"ஏற்கனவே, இலங்கைக் கடற்படைப் படகுகளில் வந்த சீனக் கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களைத் தாக்கி உள்ளனர்.
இலங்கை ஒருபோதும் நமக்கு ஆதரவாக இருக்காது. சீனா, பாகிஸ்தானோடுதான் நட்பாக இருக்கும்," என்றார் வைகோ.
"தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்க வேண்டும். அங்கே முகாமிட்டு உள்ள சிங்கள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும்.
இனப்படுகொலைக் குற்றங்களுக்காக, பன்னாட்டு நீதிமன்றத்தில் இலங்கை அரசை விசாரிக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்ப வேண்டும்,"
பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் வைகோ நேரில் கோரிக்கை
பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது அவரிடம்,   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும்.
இரண்டு பேட்டரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்துள்ளீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
என்று வைகோ கேட்டுக் கொண்டார்.

Geen opmerkingen:

Een reactie posten