[ புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 08:08.09 AM GMT ]
யாழ். மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.
பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச் சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமயத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் றெமேடியஸ் உட்பட பாடசாலை மாணவா்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

Geen opmerkingen:
Een reactie posten