[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 05:21.03 PM GMT ]
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என்று சிங்கள அரசு முதல் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பாக மனிதாபிமான நடவடிக்கை உண்மை பகுப்பாய்வு என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,
இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மைதான்.
விடுதலைப்புலிகளுடன் நடைபெற்ற கடுமையான சண்டையின்போது, பொதுமக்களின் இறப்பு தவிர்க்க முடியாததாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சாவுகள் இன்றி போரை நடத்த முடியாது; தமிழர் கொல்லப்பட்டதை தற்போது ஏற்கிறது அரசு; ஆனால் கணக்கை வெளியிடுவதற்குப் பின்னடிப்பு
இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் இறப்புக்களைப் புறக்கணித்துவிடலாம் என்று தெரிவித்திருக்கும் இலங்கை அரசு, முதல் முறையாக போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுமக்கள் கொல்லப்படாமல் போர் ஒன்றை நடத்த முடியாது'' என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறினார். எனினும் போரில் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று அரசு குறிப்பிடவில்லை.
ஆனால் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஐ.நாவும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள் என்று மனித உரிமை அமைப்புக்களும் தெரிவிக்கின்றன.
இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான மீட்புப் பணி என்று அரசு விவரிக்கும் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட "மனிதாபிமான நடவடிக்கை: உண்மைப் பகுப்பாய்வு ஜூலை 2006 மே 2009" என்ற அறிக்கை நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. அறிக்கையை வெளியிட்டு வைத்து பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உரையாற்றினார்.
வன்னியில் எந்தவொரு பொதுமக்களும் கொல்லப்படவில்லை என்று இதுவரை தெரிவித்து வந்த இலங்கை அரசுஇ தற்போது முதல் தடவையாக போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆதாரபூர்வமாக ஒத்துக்கொண்டுள்ளது. எனினும் "பொதுமக்கள் இழப்புக்கள் ஏதுமற்ற போர்" என்ற கொள்கையுடனேயே அரசு போரை முன்னெடுத்ததாக அறிக்கை கூறுகின்றது.
நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் தெரிவித்ததாவது:
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அந்த இயக்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானத்தை ஏற்படுத்த புலிகள் விருப்பம் கொள்ளவில்லை. அவர்களின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எனப் பலர் பலியாகினர். இந்த மனிதகுல அழிவைத் தடுப்பதற்காகவே அரசு மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இது தொடர்பாகவே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புகளுடன் இணைந்து வெளிநாடுகளிலுள்ள தமிழ் புலம்பெயர்வாசிகள் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்திடம் போராளிகள் சரணடைவது தொடர்பாக எனக்கு எவரும் அறிவிக்கவில்லை. இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சுட்டுக்கொல்லப்படவில்லை.
விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களான தமிழ்ச்செல்வன், சூசை மற்றும் ரூபன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும்கூடச் சரணடைந்தார்கள். புலிகளின் ஊடகத்துறைக்குப் பொறுப்பாளியாக இருந்தவரான தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரும் இராணுவத்திடம் சரணடைந்தனர்.
சனல் 4 தொலைக்காட்சியில் தோன்றிய தமிழ்வாணி ஞானகுமார் என்ற பெண் விடுதலைப்புலி உறுப்பினர். புலிகளுடன் இணைந்து செயற்பட்ட ஒருவர். இவர் விடுதலைப்புலிகளின் சர்வதேச நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்தார்.
இலங்கையின் இறைமைக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த சனல் 4 தொலைக்காட்சி மற்றும் விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு இந்த அறிக்கை முற்றுப்புள்ளி வைக்கும் என்றார்.

Geen opmerkingen:
Een reactie posten