தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 augustus 2011

பிளிஸ் சிட் டவுன் ! சமல் ரஜபக்ஷவுக்காக கோபப்பட்ட சபாநாயகர் !

03 August, 2011
போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேற்று முந்தினம் (01.08.2011) இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது அங்கு தமிழின உணர்வாளர்களால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே. சிறீலங்கா அரசாங்க அதிபர் மஹிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரும், சபாநாயகருமான சமல் ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரே இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றிருந்தனர். இதன்போது அவர்களை வரவேற்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் உரை நிகழ்த்தியபோது, தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.கவின் உறுப்பினர்கள் எழுந்து நின்று கூச்சலிட்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக வைகோ தலையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களும் எழுந்து நின்று போர்க்குற்ற அரச நபர்களுக்கு எதிராக கூச்சலிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டபோது சபாநாயகர் மீரா குமார் மிகுந்த கோபம் அடைந்து, அவர்கள் தமது அழைப்பில் இங்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் எனவும் கடும் தொனியில் கூறியிருந்தார். அ.தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.செம்மலை, முனிசாமி தம்பித்துரை ஆகியோர் தலைமையிலான உறுப்பினர்களே தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இவர்களை வரவேற்று வரவேற்ப்புரை நிகழ்த்திய சபாநாயகர் மீரா குமார் சமால் ராஜபக்ஷவை கிஸ் எக்சலன்சி( His Excellency ) என்று (அதாவது ஒரு நாட்டின் பெருந்தலைவரை) கூப்பிடுவது போல பெரும் மரியாதை கொடுத்து அசடு வழிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆ.தி.மு.க எம்பீக்கள் சும்மா இருப்பார்களா என்ன, தமது தமிழின உணர்வைக் காட்டிவிட்டார்கள் போங்கள் !

Geen opmerkingen:

Een reactie posten