நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பட்டாளமாகச் சென்று பல நிகழ்வுகளில் பங்கேற்று மேடைகளில் முழங்கினர். இதன் போது பலர் போட்டி போட்டுக் கொண்டு தமிழிலும் உரையாற்றினர்.
யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நாமல் ராஜபக்ச தமிழில் உரையாற்றினார்.
யாழில் புற்று நோய் சிகிச்சை வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக தெய்வேந்திரமுனையில் இருந்து பருத்தித்துறை முனை வரையும் இடம்பெற்ற நடை பயணத்தின் இறுதி நாள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, நாமல் ராஜபக்ச தமிழில் உரையாற்றினார். இதற்கெல்லாம் மகுடம் வைத்தால்ப்போல், அன்றைய முக்கிய நிகழ்வான ‘புற்றுநோய்’ மருத்துவமனை என்பதற்கு ‘பூத்து நோய்’ என உச்சரித்திருந்தார்
|
Geen opmerkingen:
Een reactie posten