[ திங்கட்கிழமை, 01 ஓகஸ்ட் 2011, 02:20.23 PM GMT ]
கனடாவில் இருந்து பிள்ளைகளைப் பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றவர் சாவகச்சேரி பகுதியிலுள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரஸ்தாப நபர் உள்ளங்கியின் நூலினாலேயே தூக்குப் போட்டுள்ளதாகவும், எனினும் அவரது இருகால்களும் நிலத்தில் ஊன்றியபடி இருந்ததாகவும் இவரது மரணத்தில் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் சாவகச்சேரி, டச்சு வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இரத்தினம் சிவகுமார் என்பராவார். இவருக்கு இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணமானவரின் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சாவகச்சேரி பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மரணம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:
Een reactie posten