தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 augustus 2011

படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை! – தமிழ்ச்செல்வன், சூசையின் மனைவியர் - ரிவிர தகவல்

 
[ ஞாயிற்றுக்கிழமை, 31 யூலை 2011, 02:43.44 AM GMT ]
அரசாங்கப் படையினர் சிவிலியன்கள் மீது எவ்வித தாக்குதல்களையும் நடத்தவில்லை என தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவியும், புலிகளின் முன்னாள் கடற்படைத் தளபதி சூசையின் மனைவியும் தெரிவித்துள்ளனர். ரிவிர என்ற சிங்களப் பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
 ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைத் தவிர வேறும் பொதுமக்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை என தமிழ்ச் செல்வனின் மனைவி தெரிவித்துள்ளார்.
போராட்டம் முடிவடையும் வரையில் தாம் போர் வலயத்தில் இருந்ததாகவும் படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ச் செல்வன் உயிரிழந்ததனைத் தொடர்ந்து புலிகள் தம்மை சரியாக கவனிக்கவில்லை எனவும் அவர் முறைப்பாடு செய்துள்ளதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது புலிகளின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட சிவிலியன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கடல் வழியாக தப்பிச் செல்ல முற்பட்ட போது கடற்படையினர் தம்மையும் பிள்ளைகளையும் காப்பாற்றியதாக சூசையின் மனைவி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் சனல்4 ஊடகத்தினால் இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கும் நோக்கில் இலங்கை ஊடகவியலாளர்கள் விசேட விவரணமொன்றை தயாரித்து வருகின்றனர்.
இந்த விவரணச் சித்திரத்தில் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்களான சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரின் மனைவியர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
தமது பிள்ளைகள் கொழும்பு பாடசாகைளில் கல்வி பயில்வதாகவும், இராணுவத்தினர் சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் குறித்த இருவரும் படையினருக்கு புகழ்மாலை சூட்டியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten