[ புதன்கிழமை, 03 ஓகஸ்ட் 2011, 12:59.39 AM GMT ]
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் துவண்டு நிற்கும் ஈழத் தமிழினத்திற்கான நீதி கோரிக்கைப் பயணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையாரது துரித செயற்பாடுகள் மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக, பதவிக்கு வந்தவுடனேயே தமிழ்நாடு; சட்டமன்றத்தில் முதல்வர் அவர்களால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் பற்றி அனைவரும் அறிவர். இந்த தீர்மானத்தை நாம் ஏற்கனவே மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தோம்.
சிறீலங்கா அரசாங்கத்தை போர்க்குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த அரசாக பிரகடனம் செய்ய, ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும், சிறீலங்கா அரசாங்கம் மீது பொருண்மியத் தடை ஏற்படுத்தி, அடிபணிய வைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரின் தீர்மானம் வலியுறுத்தி நின்றது.
ஈழத் தமிழர்கள் சிங்கள மக்கள் போன்று சம உரிமையுடன் வாழ வழிசெய்ய செய்ய வேண்டும் எனவும், இடம்பெயர்ந்த மக்கள் உடனடியாக தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்பட வேண்டும் என்றும் இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இதற்கும் மேலாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் (இராஜாங்க அமைச்சர்) திருமதி ஹிலாரி கிளின்டன் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டதும், அவர் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்ததும், இந்த சந்திப்பில் பேச எவ்வளவோ விடயங்கள் இருந்தும் காலத்தின் தேவையுணர்ந்து ஜெயலலிதா அம்மையார் ஈழத்தமிழ் மக்களின் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதித்திருப்பதையும் நாம் வரவேற்கின்றோம்.
இத்துடன், நின்றுவிடாது ஈழத்தமிழ் மக்கள் விடயத்தை இந்திய நாடாளுமன்றில் எழுப்பி, அதனை இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் நன்கறியச் செய்வதுடன், அவர்களின் ஆதரவையும் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அறிவித்துள்ளமை, அவரின் செயல் வீரத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
தமிழின அழிப்பை மேற்கொண்டு போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரசாங்கத்தின் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நாடாளுன்றக் குழுவினர் கடந்த திங்கட்கிழமை (01-08-2011) இந்திய நாடாளுமன்றத்திற்கு சென்றபோது அவர்களுக்கு எதிர்க்குரல் எழுப்பிய அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அவர்களிற்கு ஆதரவாகச் செயற்பட்ட எனைய கட்சிகளையும் இந்த இடத்தில் நன்றியுடன் நோக்குகின்றோம்.
மேடைப்பேச்சுடனும், அறிக்கையுடனும் நின்றுவிடாத தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலிலதா அம்மையாரின் செயல்வீரம், துவண்டு கிடக்கும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில், குறிப்பாக இன்னும் விடியலின் நம்பிக்கையுடன் தாயகத்தில் இருக்கும் எமது உறவுகள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி நிற்பதை நாம் அவதானிக்கின்றோம்.
தாயகத்தில் உள்ள உறவுகள் எண்ணிலடங்கா அவலங்களைச் சந்தித்து, மூச்சுவிட முடியாத படைத்துறை அடக்குமுறைக்குள் வாழ்ந்து வருகின்ற போதிலும், தமது அபிலாசைகளை வெளிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டுத் தலைமைக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் மீண்டும் தமது தெளிவான செய்தியைச் சொல்லி உள்ளதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
பிரித்தானியா உட்பட புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தாயகம் நோக்கிய நீதி கோரிக்கைப் பயணத்தில் தமிழ்நாடும் சமாந்தரமாகப் பயணிக்க வேண்டியுள்ள முக்கிய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் தலைமையை ஏற்றுள்ள ஜெயலலிதா அம்மையாரின் செயற்பாடுகள் நிச்சயம் துணை நிற்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
நன்றி.
பிரித்தானிய தமிழர் பேரவை

Geen opmerkingen:
Een reactie posten