இலங்கை படையினரால் காலாகாலமாக பாதிக்கப்பட்டு வந்த மக்களே வேறு வழியின்றி ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பில் இணைந்து போராடுகிறார்கள் என்று அமெரிக்கா அறிந்து.

சிங்கள அரசின் கடும் இனவாத போக்கினாலேயே புலிகள் அமைப்பு அதிதீவிரமாக விஸ்தரிக்கப்பட்டிருந்ததாகஆமெரிக்கா அறிந்துள்ளது.

குறிப்பாக காரணமற்ற கைதுகள்,சித்திரவதைகள்,கற்பழிப்புகள்,கொலைகள்,அடக்குமுறை,ஒடுக்கப்படுதல்,தீண்டத்தகாத மனிதர்களாக நடத்தப்பட்டமையே இவ்வாறு மக்கள் புலிகள் பின் நிற்பதற்கு ஆணிவேரான காரணமாக அமைந்துள்ளது.

படையினர் யுத்த நிறுத்த காலத்தில்கூட துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என புலிகள் குற்றம் சாட்டி வந்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பாடசாலை மாணவி ஒருவர் 2005 ஆம் டிசம்பர் மாதம் காணாமல் போனார் என்கிற சம்பவத்தோடு படையினரை புலிகள் தொடர்புபடுத்தி இருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிறுவர் போராளிகளில் 25 சதவீதமானோர் குடும்பத்தினருக்கு எதிராக படையினரால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோகங்களை நேரில் பார்த்தவர்கள் ஆவர் என்று 1993 ஆம் ஆண்டு இடம்பெற்று இருந்த கருத்துக் கணிப்பு ஒன்று கூறுகின்றது.

இந்த தகவலை விக்கிலிக்ஸ் மூலம் உயர்வு வெளியிடுகிறது.