தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்டு இருந்த விரிசலை சரி செய்கின்றமைக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான குழு ஒன்று வன்னிக்கு 2004 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி மத்தியஸ்தம் பேச சென்று இருக்கின்றது இக்குழுவினர் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்தி இருக்கின்றனர்.
முறுகலை அமைதியான முறையில் சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றார் என தமிழ்ச்செல்வனுக்கு ஆயர் தெரிவித்து இருக்கின்றார்.
வட மாகாண தமிழர்களால் நடத்தப்படுகின்ற விதம் குறித்து கிழக்கு மாகாண தமிழர்களுக்கு அதிருப்தி காணப்படுகின்றது என பூடகமாக சுட்டிக் காட்டி இருக்கின்றார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு மறுநாள் அனுப்பி வைக்கப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன. நேரடியாக நாள் குறித்த பிரபாகரன்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படுகொலைத் தீர்மானங்கள் குறித்து அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட உலக நாடுகள் அறிந்து வைத்திருக்கின்ற ஒரு விடயம் மிகவும் சுவாரஷியம் நிறைந்ததாகவும், அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் பிரபாகரனின் படுகொலைத் தீர்மானங்கள் குறித்து இந்நாடுகளின் கொழும்பில் உள்ள தூதரகங்கள் அறிந்து கொண்டன.
இராஜதந்திர மட்டத்தில் இவ்விடயம் குறித்து அலசி ஆராய்ந்து இருக்கின்றன.
அதே நேரம் அந்தந்த நாடுகளில் வெளியுறவு அமைச்சுகளுக்கும் அறிவித்தும் இருக்கின்றன.
அதாவது எவரையேனும் படுகொலை செய்ய வேண்டும் என்று விரும்புகின்ற பட்சத்தில் படுகொலை செய்யப்பட வேண்டியவர் குறித்து எழுத்துமூல அறிவுறுத்தல்களை புலி உறுப்பினர்களுக்கு பிரபாகரன் வழங்குவார் என்பதுதான் அவ்விடயம்.
2003 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் வரையான காலப் பகுதியில் ஏராளமான படுகொலைகள் இடம்பெற்றமையை தூதரகங்கள் மிக உன்னிப்பாக அவதானித்து இருந்தன.
20 கொலைகள் வரை இடம்பெற்று இருந்தன என்று கண்டு கொண்டன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லது இலங்கை இராணுவத்துக்கு வேலை செய்தவர்கள்தான் கொல்லப்பட்டு இருக்கின்றனர் என்று கண்டு பிடித்தன.
விடுதலைப் புலிகள் இயக்கம்தான் இப்படுகொலைகளை மேற்கொண்டு உள்ளது என சர்வதேச சமூகம் நம்புகின்றது என அறிந்து வைத்திருந்தன.
இப்படுகொலைகள் குறித்து இந்திய தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி Taranjit Sandhu அமெரிக்க தூதரக அதிகாரிகளோடு 2003 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி பேசி இருக்கின்றார். எவரையேனும் கொலை செய்ய வேண்டும் என்கிறபோது பிரபாகரன் கொல்லப்பட வேண்டியவர் குறித்து எழுத்துமூல அறிவுறுத்தல்களை வழங்குவார் என்று இந்திய அதிகாரி அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி இருக்கின்றார். இந்திய அதிகாரி சுட்டிக் காட்டிய விடயத்தின் உண்மைத் தன்மை குறித்து அமெரிக்க தூதரகத்தில் சுயம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆயினும் அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2003 ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து விக்கிலீக்ஸ் மூலம் இத்தகவல்கள் கிடைத்து உள்ளன. புலிகளிடம் 8,000 முதல் 12,000 போராளிகளே உள்ளனர்: காட்டிக்கொடுத்த அமெரிக்கா ! இலங்கை அரசோடு புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காலத்தில், புலிகள் அமைப்பில் சுமார் 8,000 முதல் 12,000 வரையான போராளிகளே உள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இத் தகவல் எவ்வாறு பெறப்பட்டது என அது தெரிவிக்காத போதிலும் குறிப்பாக இத் தொகைக்கு உட்பட்டே புலிகள் இருக்கவேண்டும் என அது தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள வில்ஸ் என்பவர் இது தொடர்பான தகவல்களை தமது தலைமையகத்துக்குத் தெரிவித்துள்ளார். குறிப்பாக புலிகள் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் அவர்கள் கணிசமான அளவு ஆட்களைச் சேர்த்தும் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தம்மிடம் உள்ள போராளிகளின் எண்ணிக்கை இவ்வளவு தான் என எப்போதும் தெரிவித்தது இல்லை. மற்றும் அவ்வியக்கத்தில் இவ்வளவு போராளிகள் இருக்கிறார்கள் என எவராலும் அண்ணளவாகக் கூட கூறமுடியாத காலகட்டத்தில், அமெரிக்கா இதுபோன்ற துல்லியமான எண்ணிக்கையை எவ்வாறு அறிந்தது என்பது பெரும் சந்தேகம் தரும் விடையமாக அமைந்துள்ளது. இவ்விடையம் நிச்சயம் இலங்கை அரசுக்கு அமெரிக்காவால் பரிமாறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
இத் தகவல்கள் அமெரிக்க தலைமைக்கு அனுப்பப்படும் போது அதனை விக்கி லீக்ஸ் பெற்றுள்ளது. |
Geen opmerkingen:
Een reactie posten