இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மறுநாள், யாழ் சென்ற இலங்கை அதிபர் மகிந்தர் அங்கே டக்ளஸை சந்தித்து இரகசிய திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார். யாழ் மத்திய கல்லூரியில் நீச்சல் தடாகத்தை திறந்துவைத்த மகிந்தர் பின்னர் டக்ளஸுடன் உரையாடியுள்ளார். அப்போது புலம்பெயர் தமிழர்களை அடக்க ஏதாவது வழியுண்டா எனவும், அங்குள்ள அமைப்புகளைச் சிதைக்க நீங்கள் ஏன் உங்கள் ஆட்களை அனுப்பக்கூடாது என்று அவர் வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த டக்ளஸ் தமக்கு பணத்தை தந்தால் தாம் அதனைச் செய்யத் தயார் என மகிந்தரிடம் கூறியுள்ளார். சம்பவ இடத்தில் நின்றிருந்த முக்கிய நபர் ஒருவரால் இவ்விடையம் அம்பலமாகியுள்ளது.
தனக்கு பணமும் மற்றும் தனது ஆட்களை வெளிநாட்டிற்கு அனுப்ப இலங்கை அரசு உதவிசெய்தால் இத் திட்டத்தை நிறைவேற்ற தாம் தயார் என டக்ளஸ் பதிலளித்துள்ளார். உடனே குறுக்கிட்ட மகிந்தர் இதனை தனது தம்பி கோத்தபாயவுடன் பேசுமாறும் அவரே கே.பி ஊடாக புலம்பெயர் தேசங்களில் சில செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் உலகத் தமிழர் பேரவை(GTF) மற்றும் நாடு கடந்த அரசின்(TGTE) செயல்பாடுகளை முதலில் முடக்கவேண்டும் என மகிந்தர் கூறியுள்ளார். கே.பி தான் முதல் முதலாக நாடு கடந்த அரசு என்ற அமைப்பு ஒன்றை உருவாக்க முனைந்தார் என்றும், அதன் அடிப்படையில் அவருக்கு அவ்வமைப்பில் ஏதாவது தொடர்பு இருக்கும் எனக் குறிப்பிட்ட மகிந்தர், புலம்பெயர் தமிழ் மக்கள் தமக்கு பெருத்த தலையிடி ஒன்றை தருவதற்கு முன்னர் அவர்களை சரிக்கட்டவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் செயல்படும் தமிழ் அமைப்புகளுக்குள் டக்ளஸ் ஆட்களை ஊடுருவவைத்து அதனூடாக அவர்களின் செயல்பாடுகளை முடக்க இவர்கள் இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என இவர்களுடன் நின்றிருந்த நம்பத்தகுந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten