ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காணி, காவல்துறை அதிகாரங்களை தன்னிடம் ஒப்படைப்பதற்கு தயக்கம் காட்டவில்லை என்றும் அது பிறர் கையில் சிக்குவதை அவர் விரும்பவில்லை என்றும் அமைச்சரும் ஈபிடிபி தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
என்னிடம் காணி மற்றும் காவல் துறை அதிகாரங்களை கொடுத்தால் பிரச்சினையில்லை. ஆனால் அது பிறர் கையில் கிடைத்தால் சிக்கலாகி விடும் என்றே ஜனாதிபதி மகிந்த நினைப்பதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் அவசியமானது என்றும் ஆனால், இப்போது இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்டாலே சந்தேகம் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், சிங்கள சமூகங்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்பும் வரை, இப்போதைக்கு இந்த இரண்டு விவகாரங்களையும் கைவிட்டு வடக்கு,கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளில் கவனம் செலுத்தலாம் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நலன்களை வீணடிப்பதாகவும், பல தேவையற்ற பிரச்சினைகளை அவர்கள் உருவாக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு ஒன்றைச் சொல்லும் அவர்கள் இந்தியாவுக்கு மற்றொன்றை கூறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten