இலங்கையின் 64ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 1600 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சிறு குற்றச் செயல்களுக்காக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளும் 70 வயதுக்கு மேற்பட்ட சில கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையை சேர்ந்த கைதிகளே அதிகளவில் விடுதலை செய்யப்பட உள்ளனர்.
சிறைச்சாலைகளை மூடி அதற்கு பதிலாக மறுவாழ்வு மையங்களை அமைப்பதே ஜனாதிபதியின் நோக்கமாக அமைந்துள்ளது எனவும் சிறைக் கைதிகளின் மறுவாழ்விற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten