ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், இலங்கைக்கெதிராக ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது இலங்கையில் எல்லாச் சமூகங்களையும் நல்லிணக்கத்தை நோக்கி நகர ஊக்குவிக்கும் என அமெரிக்கா பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பேச்சாளரான டேவிட் கென்னடி நெதர்லாந்து வானொலிக்கு அளித்துள்ள நேர்காணல் ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது முக்கியமானதொரு மனித உரிமைகள் பிரச்சினை. இதற்கு சிறிலங்கா பதிலளிக்க வேண்டிய தேவை உள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானமானது, அந்த இலக்குகளை அடைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten